சிம்பு ஆரம்பத்துலேயே சொன்னாரு – மீம் மற்றும் கிண்டல்களுக்கு கௌதம் மேனன் பதிலடி.

0
1978
karthik
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் ரொமான்டிக் கதைகளை எடுக்கும் இயக்குனர்களில் இயக்குனர்களில் கெளதம் மேனனும் ஒருவர். இவர் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான “விண்ணைத் தாண்டி வருவாயா” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிம்பு, த்ரிஷா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

சிம்பு, த்ரிஷா இருவரின் சினிமா வாழ்க்கையிலுமே மிக முக்கியமான படமாக இது அமைந்தது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் 2ம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது.தற்போது இந்த படத்தின் 2ஆம் பாகத்தின் முன்னோட்டத்தை போன்று ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படம் வெளியாகியுள்ளது. சிம்பு மற்றும் த்ரிஷா இருவரும் இதில் நடித்துள்ளனர். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் வீடியோ கால் மூலம் கெளதம் மேனன் இந்த குறும்படத்தை இயக்கி உள்ளார்.

- Advertisement -

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானே இதற்கும் இசை அமைத்து உள்ளார். இந்த குறும்படம் வெளியான ஒரு சில நாளில் பல மில்லியன் பார்வையகர்களை கவர்ந்தது. ஆனால், இந்த குறும்படத்தில் நடிகை திரிஷா, சிம்புவை ட மூனாவது பிள்ளை என்று சொன்ன அந்த ஒரு வார்த்தை தான் மீம் கிரியேட்டர்களின் மீம்களுக்கு இந்த குறும்படத்தை பலியாக வைத்தது.

This image has an empty alt attribute; its file name is trii.jpg

சமீபத்தில் கூட இந்த மீம்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்த திரிஷா, காதில் கை வைத்து இருக்கும் ஒரு எமோஜி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். சிம்பாலிக்காக இது போன்ற மீம்களை காது கொடுத்து கேக்க முடியல என்று சூசகமாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த மீம்களுக்கு எல்லாம் பதில் சொல்லும் விதமாக கௌதம் மேனன் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

-விளம்பரம்-

அதில், இந்த படத்தை ஷூட் செய்வதற்கு முன்பாகவே சிம்பு என்னிடம் சொல்லிட்டார், கண்டிப்பாக நான் திரிஷா மடியில் அமர்ந்து இருப்பது போல மீம் வரும் என்று. அதற்கு ஏற்றார் போல வந்து விட்டது. பொதுவாக நான் இது போன்ற மீம்களை எல்லாம் பார்ப்பது இல்லை. மேலும், என் டீம் நபர்கள் கூட இதுபோன்ற மீம்களை என்னிடம் கொண்டு வர மாட்டார்கள். இந்த படத்தை எப்படி பார்க்கிறோம் என்பது அவரவர் எண்ணத்தை சார்ந்தது. இந்த படத்தை கள்ளத் தொடர்பு என்று பார்த்தல், அது அப்படி தான் இருக்கும். ஆனால், நான் அப்படி பார்க்கவில்லை. இதில் கார்த்திக் தனது உண்மையான காதலை ஜெஸ்ஸியிடம் தெரிவிக்கிறான், அவளுக்கும் அவனை எப்படி கையாள்வது என்பது தெரியும். நான் அனைவரையும் அவரவர் முன்னாள் காதலிக்கும் போன் செய்ய வேண்டும் என்று இதில் சொல்லவில்லை. அனைத்தும் அவரவர் சுய கட்டுப்பாட்டை பொறுத்தது என்று கூறியுள்ளார் கௌதம் மேனன்.

Advertisement