வீட்டின் வேலைக்கார பெண்ணிற்கு ஹாரிஸ் ஜெயராஜ் செய்த விஷயம். நெகிழவைத்த புகைப்படம்.

0
38599
harris-Jayaraj
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் பல தமிழ் திரைப் படங்களுக்கு பின்னணி இசையும், பாடல்களும் அமைத்து உள்ளார். மேலும், இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களுக்கும் இசை அமைத்து உள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் 2001 ஆம் ஆண்டு “மின்னலே” என்ற படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக சினிமா துறையில் கால் பதித்தார். எப்போதுமே சினிமா பிரபலங்கள் தங்களிடம் வேலை செய்யும் நபர்களுக்கு ஏதாவது ஒரு நிகழ்வு என்றால் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிப்பது இயல்பான ஒன்று. ஆனால், இதையெல்லாம் தாண்டி ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் தன் வீட்டில் பணிபுரியும் நபருக்கு செய்த விஷயம் அனைவரையும் நெகிழ வைத்தது.

-விளம்பரம்-

இதனால் ரசிகர்கள் சந்தோஷத்தில் ஹாரிஸ் ஜெயராஜை பாராட்டி உள்ளார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் வீட்டில் பணியாற்றி வரும் நபர் லக்ஷ்மி. இவர் ஹாரிஸ் ஜெயராஜ் வீட்டில் ஏழு வருடங்களாக பணியாற்றி வருகிறார். தற்போது லட்சுமி என்ற நபருக்கு பிறந்தநாள் வந்து உள்ளது. இதனால் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் தன்னுடைய வீட்டில் பணிபுரியும் லட்சுமிக்கு பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். மேலும், கேக் வெட்டும் போது எடுத்த அவருடைய புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவு விட்டு லக்ஷிமி பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதையும் பாருங்க : கலக்க போவது யாரு நிஷாவிற்கு குழந்தை பிறந்தது. ஆணா? பெண்ணா? எல்லாம் அவர் ஆசைபட்டபடி தான்.

- Advertisement -

இதனை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த மாதிரி தன் வீட்டில் பணிபுரியும் நபருக்காக எந்த ஒரு சினிமா பிரபலம் இந்த அளவுக்கு செய்ததில்லை. உங்களுடைய செயல்களால் நாங்கள் நெகிழ்ந்து விட்டோம் என்றும் கூறி வருகிறார்கள் ரசிகர்கள். ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் அண்ணியன், அருள், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பீமா, வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, நண்பன், மாற்றான், துப்பாக்கி, இரண்டாம் உலகம், என்னை அறிந்தால், அனேகன் உள்ளிட்ட பல பிளாக் பஸ்டர் படங்களுக்கு இசை அமைத்தவர்.

-விளம்பரம்-

சமீபத்தில் கூட டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுக்கு கவுரவ பட்டம் வழங்கினார். இதை பார்த்து இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். மேலும், இவர் துருவ நட்சத்திரம் கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்ற இரண்டு படங்களுக்கும் இவர் இசையமைத்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் அடுத்த வருடம் திரையரங்கிற்கு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

Advertisement