கலக்க போவது யாரு நிஷாவிற்கு குழந்தை பிறந்தது. ஆணா? பெண்ணா? எல்லாம் அவர் ஆசைபட்டபடி தான்.

0
54435
Nisha
- Advertisement -

பொதுவாக பெண் மேடை ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் கொஞ்சம் அரிதான ஒன்று. அப்படி அறிமுகமான பல பெண் மேடை ஸ்டான்ட் அப் காமடியன்கள் விலாசம் இல்லாமல் சென்று விட்டார்கள். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, தற்போது மக்களின் மனதில் அதிக இடம் பிடித்தவர் அறந்தாங்கி நிஷா. மேலும், பெண்களும் நகைச்சுவை செய்ய முடியும் என்ற கருத்தை தகர்த்தெறிந்தவர். காமெடியில் பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறி வந்தார்கள் மத்தியில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி அவர்கள் எண்ணம் தவறானது என்று நிரூபித்தவர் அறந்தாங்கி நிஷா.

-விளம்பரம்-

தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.அது மட்டும் இல்லைங்க நம்ம அறந்தாங்கி நிஷா சமீபத்தில் அறந்தாங்கி நிஷாவிற்கு இரண்டாம் குழந்தை பிறந்துள்ளது. அதுவும் அவர் ஆசைபட்டபடியே பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அறந்தாங்கி நிஷா கடந்த சில வருடங்களுக்கு முன் ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : விஜய் மகளாக நடிக்க அட்லீ கேட்டார். நான் தான் வேணாம்னு சொல்லிட்டேன். காரணம் சொன்ன விஜய்யின் நண்பர்.

- Advertisement -

சொல்லப்போனால் திருமணம் ஆன பின்னர் தான் அறந்தாங்கி நிஷா கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ரியாஸ் மற்றும் அறந்தாங்கி நிஷா தம்பதியருக்கு ஏற்கனவே பள்ளி செல்லும் வயதில் மகன் ஒருவர் இருக்கிறார். இந்த நிலையில் நிஷாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும், நானும் என் மகளும் நலமாக இருப்பதாகவும், பாப்பாவிற்கு சஃபா ரியாஸ் என்று பெயர் வைத்திருக்கிறோம். உங்கள் எல்லாருடைய வாழ்த்துக்கள் தேவை என்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் நிஷா.

Image result for aranthangi nisha
தனது மகன் மற்றும் கணவருடன் நிஷா

-விளம்பரம்-

ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற நிஷா பேசிய போது, இந்த அளவுக்கு நான் ஓடி உழைத்து எல்லாம் வீணாகப் போய்விடும். அதனால என்னால முடிஞ்ச வரைக்கும் நான் உழைப்பேன். அதோட கடவுள் புண்ணியத்துல எனக்கு பிறக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும். என்ன மாதிரி தைரியமாகவும், தன்னம்பிக்கையோடும் வளர்ப்பேன் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் ஆசைபட்டபடியே பெண் குழந்தை பிறந்துள்ளது.

Advertisement