பணம் இல்லாததால், நடிகை என்பதை மறைத்து அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆன பிரபல நடிகை ஷர்மிளா.

0
116982
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஷர்மிளா. தன்னுடைய ஐந்து வயதிலேயே சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். கிட்டதட்ட 40 ஆண்டுகளாக மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார். அப்படி சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்த நடிகை ஷர்மிளாவுக்கு சமீபத்தில் உடல்நிலை பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் இவர் தனியார் மருத்துவமனையில் சேர பணம் இல்லாததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல் தெரிந்தவுடன் பல பேர் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். அப்படி என்ன அவருடைய வாழ்க்கையில் நடந்து இருக்கும்? சினிமா நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா? என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
ஷர்மிளா

- Advertisement -

நடிகை ஷர்மிளா அவர்கள் இதுவரை 80 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். நடிகை ஷர்மிளா அவர்கள் ‘காபூல்வாலா’ என்ற மலையாளப் படத்தின் மூலம் ஹீரோயினியாக ஆனார். தமிழில் ‘நல்லதொரு குடும்பம்’, ‘உன்னைக் கண் தேடுதே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். இன்னும் இவர் தெரிகிற மாதிரி சொல்ல வேண்டுமென்றால் சில ஆண்டுகளுக்கு முன்னால் விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’ படத்தில் ஹீரோயினுக்கு அம்மாவாக இவர் நடித்து உள்ளார். நடிகை ஷர்மிளாவுக்கு சமீப காலமாக ஆர்த்தோ பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இதனால் இவர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் பாருங்க : வீட்டின் வேலைக்கார பெண்ணிற்கு ஹாரிஸ் ஜெயராஜ் செய்த விஷயம். நெகிழவைத்த புகைப்படம்.

இது குறித்து செவிலியர் ஒருவர் கூறியது, நடிகை ஷர்மிளா வீட்டில் வழுக்கி கீழே விழுந்து உள்ளார். இதனால் காலில் அடிபட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தார். இவருக்கு காலில் பலமான அடி என்பதால் மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. முதலில் இவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பார்க்க தயங்கினார். பின்னர் தான் சம்மதித்தார். அதுமட்டுமல்லாமல் இவர் முதலில் நடிகை என்று யாருக்குமே தெரியவில்லை. இவர் அட்மிட் ஆன பிறகு தான் ஹாஸ்பிடலில் இருந்து ஒரு சில பேர் இவரை நடிகை என்று கண்டு பிடித்தார்கள். சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த நாட்களில் அக்கம்பக்கத்தில் இவர் யாரிடமும் அதிகமாக பேசமாட்டார். இவரை பார்க்க கூட எந்த சினிமா பிரபலங்களும் வந்த மாதிரி தெரிய வில்லை என்று ஒரு செவிலியர் கூறியிருந்தார்.

-விளம்பரம்-
நடிகை ஷர்மிளா

இவரைக் குறித்து சினிமாவில் திரையுலக வட்டாரத்தில் விசாரித்தபோது அவர்கள் கூறியது, கேரளாவில் பிறந்தவர் நடிகை ஷர்மிளா. குழந்தைப் பருவத்திலிருந்து இவர் நடிக்கிறார். மேலும், இவருக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தும் ஏற்பட்டுள்ளது. இவர் முதலில் பாபு ஆண்டனியுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். பின் இருவருக்கும் இடையே பிரச்சினை காரணமாக பிரிந்து விட்டார்கள். டிவி நடிகர் கிஷோருடன் கல்யாணம் நடந்தது. ஆனால், அந்தக் கல்யாணமும் விவாகரத்துல முடிந்தது. அதன் பிறகு தான் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. தற்போது நடிகை ஷர்மிளா சென்னையில் தான் வசித்து வருகிறார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார் அது எல்லாம் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட முடியாம கஷ்டப்பட்டு உள்ளார்.

அதோடு இவர் பிள்ளைகள் ஸ்கூல் கட்டணம் கட்ட முடியாத சூழ்நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார். பின் நடிகர் விஷால் தான் நடிகர் சங்கத்தின் மூலம் அவர்களுக்கு பண உதவி செய்தார் என்றார்கள். இவர் சமீபத்தில் பல படங்களில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படம் நிறைய பிரச்சினைகள் காரணமாக ரிலீசாகவில்லை. இருந்தாலும் இவர் நட்பு வட்டாரத்தில் இவருக்கு உதவி தான் செய்து வருகிறார்கள். இது குறித்து ஷர்மிளாவிடம் கேட்டபோது அவர் கூறியது, மருத்துவமனைக்கு சென்றது உண்மை தான். பணம் இல்லாதவர்களுக்கு தானே அரசு ஆஸ்பத்திரி இருக்கு என்று தன்னுடைய பேச்சை முடித்து கொண்டார்.

Advertisement