பேட்ட படத்தின் போதே கேட்டோம். அனிருத்,ரஜினி மீது திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் கண்டனம்.

0
11998
rajini-anirudh
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த் . தற்போது இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து இருக்கும் படம் “தர்பார்”. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். மேலும், இந்த படத்தில் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் யோகி பாபு, ஸ்ரீமன், ஸ்ரேயா சரண், பிரதீப் பப்பர், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். இந்த படத்தில் ‘ஆதித்யா அருணாசலம்’ என்ற பெயரில் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து உள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து உள்ளது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து உள்ளார்.

-விளம்பரம்-
Image result for anirudh rajini

- Advertisement -

அது மட்டும் இல்லாமல் பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார். இந்த படத்தை ஜனவரி 9 ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிடப் போவதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள். மேலும், பேட்ட படத்திற்கு பிறகு இந்த படத்திற்கும் அனிருத் அவர்கள் தான் இசை அமைத்து உள்ளார். தர்பார் படத்தில் வெளியான சும்மா கிழி” என்ற பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதுமட்டுமல்லாமல் இந்த பாடல் குறித்து பல சர்ச்சைகளும் எழுந்தது. இது அனைவருக்கும் தெரிந்ததே.

இதையும் பாருங்க : உங்கள் காதலர் கல்லூரி வாசல் பிரசாந்த் மாதிரி இருக்கார். சனா கான் புகைப்படத்திற்கு கமன்ட் செய்த ரசிகர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும், இசையமைப்பாளர் அனிருத் மீது திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது. தர்பார் படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தர்பார் படத்திற்கு 450-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பணியாற்றியுள்ளார். இதில் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தில் இருந்து 5 பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். சங்கத்தில் இருக்கும் இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்பு தராததால் அனிருத் மீது இசையமைப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

-விளம்பரம்-
Image result for Anirudh With Rajini

இது குறித்து திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தீனா விடம் கேட்ட போது அவர் கூறியது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த “பேட்ட” படம். இந்த படத்திற்கும் அனிரூத் தான் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் போது அவரிடம் இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டோம். அவரும் சம்மதம் தெரிவித்து அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன் என்று கூறினார். ஆனால், தர்பார் படத்தின் போது இசைக் கலைஞர்களுக்கு அந்த வாய்ப்பை அணிருத் தரவில்லை. மேலும், இந்த விஷயம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இதனால் தான் ரஜினி மற்றும் அனிருத் மீதும் இசை திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் சார்பாக கண்டனத்தை தெரிவித்து இருக்கிறோம் என்றார்.

சிவா இயக்கத்தில் ரஜினி காந்த் நடிக்கும் அடுத்த படம் “தலைவர் 168”. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
நடிகர் ரஜினியுடன் இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள் என்ற உள்ளிட்ட வந்து உள்ளது. இந்த படத்திற்கு வெற்றி அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டராக பணியாற்றி உள்ளார். டி.இமான் அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார்.

Advertisement