மணி சாருக்கு அப்புறம் கார்த்தி ஒரு இயக்குனருடன் இரண்டாம் முறை படம் பண்ணுவது என்னுடன் தான் – முத்தையா சொன்ன காரணம்.

0
517
Muthaiah
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். முத்தையா இயக்கிய படங்கள் எல்லாம் கிராமத்து பாணியில் இருக்கும்.
அதே போல் விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது. மேலும், இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக புதுமுக நடிகை அதிதி சங்கர் நடிக்கிறார்.

-விளம்பரம்-
viruman

விருமன் இசை வெளீயிட்டு விழா :-

விருமன் படத்திற்கு முன்பே அதிதி சங்கர் தெலுங்கில் ஒரு பாடலை பாடி இருக்கிறார். தற்போது விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக இளைஞர்கள் மனதை கொள்ளை அடித்து இருக்கிறார். அதோடு இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கின்றனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இதில் கார்த்திக், அதிதி உட்பட படக்குழுவினர் கலந்துக் கொண்டு சிறப்பித்திருந்தனர். இந்நிலையில் அதிதியால் பாடும் வாய்ப்பை சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி இழந்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்துல நான் என் மனசுல பட்டதைத்தான் சொன்னேன் – செம்பருத்தி சீரியல் நடிகை.

கடைசி விவசாயி படம் எனக்கு மிகவும் பிடித்த படம் :-

மேலும் தனியார் யூடியுப் நிறுவனம் ஒன்றிருக்கு இன்டர்வியூ கொடுத்த விருமன் பட இயக்குனர் முத்தையா கூறுகையில். சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த கடைசி விவசாயி படம் பார்த்தேன். அந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படம் மற்றும் மிகச் சிறந்த படமும் கூட அந்த படம் என் மக்களிடையில் போய் சேரவில்லை என தெரியவில்லை என்று வருத்தப்பட்டார். கடைசி விவசாயி படத்தின் காட்சிகள் எடுத்த லொகேஷன்கள் சென்று பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு 100 நாள் வேலை வேலை செய்து கொண்டு இருந்த பெண்கள் அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். இவ்வாறு இந்த திட்டத்தை கொண்டு வந்து மக்களை சோம்பேறி ஆக்கிக் கொண்டு விவசாயத்தை சீரழிக்கிறார்கள். நான் வேறு ஒரு விஷயத்தையும் நோட் செய்தேன் அதையெல்லாம் சொன்னால் அரசியல் பிரச்சனைகள் எல்லாம் வந்து சேர்ந்துவிடும் என்று கூறினார்

-விளம்பரம்-

நான் பழைய கதையாக கொண்டு வருகிறேனாம் :-

நான் கதை சொல்ல ஒவ்வொரிஞம் சொல்லும் போது அவர்கள் என்ன பழைய கால கதை போல் இருக்கிறது. கிராமத்து சாயல் படங்களையா கொண்டு வருகிறீர்கள் என்றவாறு சொல்வார்கள். அதற்காக கூழ் என்னதான் பழைய காலத்து சாப்பாடாக இருந்தாலும் அதற்கான தனித்துவம் எப்போதும் இருக்கும். கூழ் சாப்பிடும்போது நம் உடம்புக்கு உண்டான ஆரோக்கியத்தை தான் அது சேர்க்கும். அது மட்டும் இல்லாமல் இப்போது கருப்பட்டியில் காபி என்றால் நாம் அனைவரும் கருப்பட்டியில் காப்பியா என்று ஆச்சரியப்படுகிறோம். அவர்கள் தான் வெள்ளத்தில் காபி போடும்போது நீங்கள் என்ன வெள்ளத்தில் காபி போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் சீனியில் போடுங்கள் என்றெல்லாம் பேசுனார்கள். ஒருவர் இறந்து விட்டால் அங்கே ஒப்பாரி வைப்பது வழக்கம் அந்த ஒப்பாரியும் டிராமா போடுவது போல் இல்லாமல் மயில்டாக கண்கலங்கி ஒப்பாரி வைப்பது போல் இருக்க வேண்டும் என்றவாரு கூறினார்.

நான் ஹிட்டுக்காக படம் எடுக்கமாட்டேன் :-

மேலும் கூறியஇயக்குனர் முத்தையா நான் எப்போதும் படம் ஹிட்டாக வேண்டும் என்ற நோக்கத்துடன் படம் பண்ணுவதில்லை. ஏனென்றால் படம் ஹிட் படமா எடுக்கணும் நினைத்து நாம் வேலைகள் செய்தால் சூழ்நிலைகள் அதற்கேற்றார் போல இருக்காது மாறிக்கொண்டே இருக்கும். நான் எப்பொழுதும் எனது ஸ்கிரிப்ட் எழுதுவதில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருப்பேன். இந்த இடத்தில் இந்த மாதிரியான காட்சிகள் வைத்தால் படத்தில் எடுபடும் என்று தான் ஸ்க்ரிப்ட் எழுதுவேன். நாம் படம் ஹிட்டாக வேண்டும் என்ற எண்ணத்தில் படம் செய்ய ஆரம்பித்தால் அது ஹிட்டாமல் போய்விடும். ஆம் ஏனென்றால் படம் வெளியாகும் சமயத்தில் அந்த ஹிட்டுக்கான ட்ரெண்டிங் மாறிவிடும் பிறகு யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் அந்த படம் ஹிட் ஆகும் என்று இயக்குனர் முத்தையா தெரிவித்தார்.

இளையராஜவுடன் பட பன்னுவது என் கனவு :-

நான் உதவி இயக்குனராக பணியில் சேரும்போது தான் அரவிந்தன் படம் மூலமாக யுவன் சங்கர் ராஜா வெளியே தெரியவந்தார். அதன் பின்பு யுவன் சங்கர் ராஜா மிகவும் பிஸியான இசையமைப்பாளராக மாறிவிட்டார். நான் இளையராஜாவுடன் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை மற்றும் கனவோடு தான் சென்னை வந்தேன். மிக விரைவில் இளையராஜாவுடன் படம் செய்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் அது மட்டும் இல்லாமல் இளையராஜாவிற்கு ஏற்றவாறு வலுவான திரை கதையை ரெடி பண்ண வேண்டும் அந்தத் திரைக்கதையும் அவருக்கு ஏற்ற விதத்தில் நான் கொடுக்க விரும்புகிறேன். இளையராஜா அவர்களின் இசை என்றும் தடம் மாறாது அதுபோல அவரிடம் கொண்டு செல்லும் என் படமும் தடம் மாறமல் இருக்க வேண்டும் என விரும்பன் பட இயக்குனர் முத்தையா நம்மிடம் மனம் திறந்து பேசினார்.

Advertisement