இன்னும் சில மாதங்களில் சூப்பர்ஸ்டார் ரஜினியுன் 2.0 படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தினை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். 2010ல் வெளிவந்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் என முதலில் கூறப்பட்டது.
ஆனால், இது எந்திரனனின் இரண்டாம் பாகம் கிடையாது என சங்கர் கூறிவிட்டார். அதற்கு மாறாக, எந்திரன் சிட்டி ரோபோ இந்த படத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் எனவும் கூறியுள்ளார்.
எந்திரன் படத்திற்கு முன்பு சங்கரின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடித்ததில்லை. ஆனால், 1999ஆம் ஆண்டு வெளிவந்து செம்ம ஹிட் முதல்வன் படத்தில் நடிக்க முதலில் சூப்பர்ஸ்டார் ரஜினியிடம்தான் பேசப்பட்டது. ஆனால், அப்போதைய அரசியல் காரணங்களால் ரஜினி அதில் நடிக்க மறுத்துவிட்டார். அதன்பின்னர், விஜய்க்கு வந்தது ஆனால், விஜயும் பிஸியாக இருந்ததால் அர்ஜுனுக்கு சென்றது.
இதையும் படிங்க: அடையாளம் தெரியாமல் ஒல்லியாக மாறிய ப்ரண்ட்ஸ் பட நடிகை ! புகைப்படம் உள்ளே
பாட்ஷா, அண்ணாமலை படத்தினை தொடர்ந்து இந்த படத்திலும் நடித்திருந்ததால் ரஜினியின் அரசியல் வாழ்க்கை இன்னும் சற்று முன்னதாகவே துவங்கி இருக்கும் என அவரது ரசிகர்கள் கருதுகின்றனர்.