தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவனாக திகழ்பவர் வடிவேலு. நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிகர் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சுராஜ் இயக்கிஇருந்தார். லைகா புரோடக்சன் இந்த படத்தை தயாரித்துஇருந்த இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடித்துஇருந்தார்.மேலும், இவர்களுடன் இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ் காந்த், லொள்ளு சபா சேஷு உட்பட பல நடிகர்கள் நடித்துஇருந்தனர்.
சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துஇருந்தார். படத்தில் கடத்தல் காரர்களாக ஆனந்த்ராஜ், வடிவேலு இருக்கிறார்கள். தாஸ் என்ற ஆனந்தராஜ் பெண்களை கடத்துகிறார். நாய் சேகர் என்ற வடிவேலு பணத்திற்காக விலை உயர்ந்த நாய்களை கடத்துகிறார்.பின் ஆனந்த் ராஜுக்கு பிடித்த நாயை வடிவேலு கடத்துகிறார். இதனால் இருவருக்குமே பிரச்சனை ஏற்படுகிறது.
இதனை அடுத்து தன் குடும்பத்தின் கடந்த காலம், அவர்களுக்கு ராசியான நாய் கடத்தப்பட்டது குறித்து வடிவேலுக்கு தெரிய வருகிறது. இவர்களுடைய நாய் ஹைதராபாத்தில் இருக்கும் பெரும்புளியான மேக்சி இடம் இருக்கிறது. இதை மீட்க வடிவேலு முயற்சிக்கிறார். இந்த முயற்சியில் வடிவேலு வெற்றி பெற்றாரா? இல்லையா? ஆனந்தராஜுக்கும் வடிவேலுக்கும் இடையே இருந்த பிரச்சனை சுமூகமானதா? என்பதே படத்தின் மீதி கதை.
படம் வெளியான சிறிது நேரத்திலேயே படம் குறித்து பலரும் நல்ல விதமாகத்தான் கூறி வந்தார்கள். படம் பார்த்த ரசிகர்கள், பழைய வடிவேலு மீண்டும் வந்து விட்டார் என்று தான் எதிர்பார்த்து படத்துக்கு சென்றனர். ஆனால், அதற்குப் பின்பு நெகட்டிவ் விமர்சனங்கள் படம் குறித்து எழுதி வந்தது. அதிலும் வடிவேலு படத்திற்கு அவருடைய டெம்ப்ளேட்டை பயன்படுத்திபயங்கரமாக ட்ரோல் செய்து வந்தனர்.
இப்படி ஒரு நிலையில் இந்த படம் தோல்வி அடைந்தது குறித்து வடிவேலுவுடன் பல படங்களில் நடித்த முத்து காளை பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார். அதில் ‘தான் பிடித்த இடத்தில் மற்றவர்கள் வந்துவிடக்கூடாது என்பதில் எல்லாரும் தெளிவாக இருக்கிறார்கள். அந்த வகையில்தான் வடிவேலு சாரும். நாய் சேகர் படம் சரியாக போகாததற்கு நிறைய பேர் காரணம் சொல்லிட்டாங்க. அதைத்தான் நானும் சொல்கிறேன். விதி தன் வேலையைச் சரியாக செய்தது.’
“விதி வடிவேலுவை கரெக்டா செஞ்சிருக்கு” – நாய் சேகரை பொளந்த முத்துக்காளை! https://t.co/wupaoCzH82 | #vadivelu #muthukalai #naaisekarreturns #Cinema pic.twitter.com/Vsf4qLLKEW
— ABP Nadu (@abpnadu) January 9, 2023
மேலும் நாங்கள் அவருடன் நடிக்கும்போது வடிவேலு நல்லா வரணும். அந்த காமெடி பேசப்படணும் என்ற எண்ணத்தில்தான் நடித்தோம். ஆனால் இப்போது உள்ளவர்கள் தான் நன்றாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் தான் நடிக்கிறார்கள். அதுவே நாய் சேகர் படத்துக்கு வந்த விமர்சனத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.