சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலையை தொடர்ந்த இயக்குனர் மிஸ்கின்.!

0
1549
myskkin

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘துப்பறிவாளன்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் விஷால், பிரசன்னா, வினய் என்று மல்டி ஸ்டார்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஷால் ஓரு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் மிஸ்கின் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஷால் ஏற்கனவே ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் முதல் பாகத்திற்கு மாறாக படு தோல்வி அடைந்தது.

இதையும் பாருங்க : இன்றைய ப்ரோமோ வெளியாவாததற்கு காரணம் இதானா ? பிக் பாஸுக்கு இப்படி ஒரு நிலையா.! 

- Advertisement -

இந்த நிலையில் துப்பறிவாளன் படத்திற்கான ஷூட்டிங் ஸ்பாட் தேடும் பணியில் இயக்குனர் மிஸ்கின் இறங்கி விட்டதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு ஆதாரமாக மிஸ்கின் பிரபல அருங்காட்சியம் ஒன்றில் இருக்கும் சில புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும், துப்பறியாளன் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் தான். எனவே, இந்த படத்தின் இரண்டாம் பாகமாவது வெற்றியடையுமா என்பதை பொறுத்திருந்து காணலாம். மேலும், மிஸ்கின் எடுக்கும் முதல் இரண்டாம் பாக திரைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement