அனைவரும் எதிர்பார்த்திருந்த நாய் சேகர் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் கிஷோர் குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சதீஷ், பவித்ரா லட்சுமி, ஜார்ஜ் மரியம், ஸ்ரீமன், லிவிங்ஸ்டன், இளவரசு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். கல்பாத்தி எஸ்.அகோரமின் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அஜீஷும் மற்றும் அனிருத் இசை அமைத்துள்ளார். பிரவீன் பாலு படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நாய் சேகர் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் ஆராய்ச்சியாளராக ஜார்ஜ் மரியம் நடித்திருக்கிறார். இவர் விலங்குகளை வைத்து மரபணு சோதனை நடத்தி வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் சதீஷ் குடியிருக்கிறார். சதீஷ் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். மேலும், ஜார்ஜ் மரியான் வளர்த்து ஒரு நாய் வளர்த்து வருகிறார். ஒரு நாள் ஜார்ஜ் மரியான் வளர்த்து வரும் நாய் சதீசை கடித்து விடுகிறது. இதிலிருந்து சதீஸ் உடைய குணங்களெல்லாம் நாயின் குணாதிசயத்தோடு ஒத்து போகிறது. பின் சதீஸ் நாயை போல் செய்து வருகிறார். இதனால் சதீஸ் வாழ்க்கையில் பிரச்சனைகளும், மாற்றமும் ஏற்படுகிறது.
கடைசியில் சதீசுக்கு என்ன ஆனது:
உடனே இந்த பிரச்சனைக்கு மாற்று மருந்து கண்டு பிடிக்கிறார்கள். இந்த நிலையில் கடித்த நாய் காணாமல் போகிறது. இறுதியில் நாய் கிடைத்ததா? சதீஷ் மனிதனாக மாறினாரா? என்பதே படத்தின் மீதி கதை. முதன் முதலாக சதீஷ் கதாநாயகனாக இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இதற்கு முன் இவர் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் கதாநாயகனாகஅற்புதமாக நடித்திருக்கிறார். காதல், நடனம் என பல திறமைகளை இந்தப்படத்தில் காண்பித்திருக்கிறார் சதீஸ்.
சதீஸ் நடிப்பு:
நாய் போல் சதீஸ் மாறுகிறார் கடித்த நாய் மனிதனை போல் நடந்து கொள்கிறது. இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் யதார்த்தமான நிகழ்வுகளை காமெடியாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். நாய் கடித்த பிறகு வரும் காட்சிகள் எல்லாம் பயங்கரமாக இருக்கிறது. முதல் படத்திலேயே தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சதீஸ். படத்தில் கதாநாயகியாக வரும் பவித்ரா தன்னுடைய கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்திருக்கிறார்.
படத்தின் பிற தகவல்:
இந்த படத்தில் நாய்க்கு மிர்ச்சி சிவா பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். அது பல இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறது. இவர்களை தொடர்ந்து படத்தில் மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். மேலும், படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார். முதல் பாதி மெதுவாக சென்றாலும் இரண்டாம் பாதியில் கதை விறுவிறுப்பாகவும் சிரிப்போடும் சென்று இருக்கிறது. படத்திற்கு அனிருத் இசை பக்கபலம் அமைந்துள்ளது. ஒளிப்பதிவும் அருமையாக வந்திருக்கிறது. படம் முழுக்க முழுக்க காமெடி பாணியில் சென்றிருப்பதால் ஒரு பக்கா என்டர்டெயின்மென்ட் படமாக உள்ளது.
நிறைகள் :
படத்தில் சதீஷ் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பிற நடிகர்களும் தங்கள் கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
ஒரு புதுவிதமான கதை களத்தை இயக்குனர் கையாண்டிருக்கிறார்.
படத்திற்கு இசையும், ஒளிப்பதிவும் பக்க பலமாக அமைந்துள்ளது.
குறைகள் :
முதல் பாதி கொஞ்சம் சுறுசுறுப்பாக சென்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மற்றபடி சொல்லி கொள்ளும் அளவிற்கு பெரிய குறைகள் எதுவும் இல்லை.
இறுதி அலசல்:
அரைத்த மாவையே அரைத்து வழக்கமான தமிழ் சினிமாக்களை போல் ரசிகர்களை கண்டு கடுப்பு ஏற்றாமல் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பக்கா என்டர்டெயின்மென்ட் படமாக நாய் சேகர் படம் அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் நாய் சேகர் — அனைவரையும் கலகலப்பாக்கியது. பொங்கல் வின்னர்