வெளிநாட்டில் கணவர் சமைத்து போட்ட உணவு பிடிக்காமல் இந்தியா வந்துவிட்டேன் – கர்ப்பமாக இருக்கும் NINI நடிகை ஷேரிங்.

0
3208
NINI
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அதே போல ராஜா ராணி, கனா காணும் காலங்கள், ஆபீஸ், மௌன ராகம் என்று பல சீரியல்கள் இரண்டு பாகங்கள் வெளியானது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கிருவார் சீரியலும் இரண்டு பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-92.png

இந்த தொடரின் முதல் பாகத்தில் செந்தில், ரக்ஷா, ராஷ்மி என்று பலர் நடித்து இருந்தனர். ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக அவர்கள் இருவரும் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சரவணன் மீனாட்சி ரக்ஷிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இப்படி ஒரு நிலையில் , இந்த தொடரில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வனிதா ஹரிஹரன் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

- Advertisement -

நடிகை வனிதா ஹரிஹரன் தமிழில் தெய்வமகள், பகல் நிலவு, ரோஜா போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். ஆனால், இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் தான். வனிதா ஹரிஹரன் கடந்த சில வருடங்களுக்கு முன் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இப்படி ஒரு நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார்.

மேலும், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்தும் விலகினார். இந்த நிலையில் இதுகுறித்து கூறியுள்ள அவர், எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிவிட்டது ஆனாலும் என்னுடைய நடிப்பிற்காக குழந்தை வேண்டாம் என்று தள்ளி வைத்து இருந்தேன். தற்போது நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து சீரியலில் இருந்து விலகிவிட்டேன். அதற்கு முக்கிய காரணம் நான் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தேன்.

-விளம்பரம்-

அது நடிப்பு தான் என்றாலும் என்னுடைய உணர்வுகள் குழந்தையை பாதித்து விடக்கூடாது என்று நினைத்து சீரியலில் இருந்து விலகி விட்டேன். என்னுடைய கணவர் பெல்ஜியம் நாட்டில் வேலை பார்க்கிறார். நானும் அங்கேயே கொஞ்ச நாள் சென்று இருந்தேன். ஆனால், அங்கே என் கணவர்தான் சமைத்துப் போட்டார் அவரது சமையல் எனக்கு பிடிக்கவில்லை மிகவும் கஷ்டப்பட்டேன். பின்னர் அங்கு இருந்த ஒரு ஹோட்டலில் சாப்பிட்டேன் உடல் எடை மிகவும் குறைந்து விட்டது. அதனால் மீண்டும் இந்தியாவிற்கு வந்து விட்டேன்.

Advertisement