அப்பா இறந்துட்டாரு..! கேமராதான் என் அப்பா..! ஹீரோயின் ஆகணும்னு ஆசை..! சீரியல் நடிகை ஓபன் டாக்

0
2640
Actress-asritha
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில், வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் அஷ்ரிதா. மூன்று வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். மாடலிங், மூவி, சீரியல் என பிஸியாகச் சுழன்றுகொண்டிருப்பவரோடு ஒரு சந்திப்பு. அதற்கு முன், அவரைப் பற்றிய குட்டி பயோ இதோ…

-விளம்பரம்-

asritha

- Advertisement -

பெயர்: அஷ்ரிதா ஶ்ரீதாஸ்
அப்பா: ஶ்ரீதாஸ்
அம்மா: புஷ்பா (முன்னாடி நிறைய சீரியலில் நடிச்சிருக்காங்க.)
பிடிச்ச கதாபாத்திரம்: எல்லா கதாபாத்திரமும் என் ஃபேவரைட்
ஃபேமஸ் சீரியல்: `கனா காணும் காலங்கள்’ (ஒரு கல்லூரியின் கதை)
எதிர்பார்ப்பு: மெயின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு
எதிர்காலத் திட்டம்: ஹீரோயின், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்

எங்க பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும், நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை. அப்பா புரொடக்‌ஷன் மேனேஜரா இருந்தவர். தாஸ்னு சொன்னால் எல்லோருக்கும் தெரியும். நான் பத்தாவது படிச்சுட்டிருக்கும்போது இறந்துட்டார். அவர் மூலமா, மூன்று வயதிலேயே மீடியாவில் நுழைஞ்சுட்டேன். `அப்பா அம்மா’ என்கிற அந்த சீரியல்தான் என் அறிமுகம். இத்தனை வருஷமா மீடியாவில் பயணிக்கிறது எளிதான விஷயமில்லை. எனக்கு சீரியல் வாய்ப்பு தொடர்ந்து அமையலை. அந்த நேரங்களில் மாடலிங் பண்ணிட்டிருந்தேன். இப்போ, மாடலிங், சீரியல், சினிமான்னு பிஸியா இருக்கேன். நிறைய படங்களில் சில கதாபாத்திரங்களில் நடிச்சேன். இப்போ, செகண்ட் லீட் ரோல் கேரக்டர்களுக்குப் பேசிட்டிருக்கேன். சீக்கிரமே சினிமாவில் என் திறமையைப் பார்க்கலாம்” என்கிற அஷ்ரிதா, `நாம் இருவர் நமக்கு இருவர்’ பக்கம் சொல்கிறார்.

-விளம்பரம்-

asritha actress

அந்த சீரியலின் இயக்குநர், சின்ன வயசிலிருந்தே என்னைப் பார்த்துட்டிருக்கார். என் திறமை அவருக்கு நல்லாத் தெரியும். நான் குழந்தை நட்சத்திரமா இருந்தப்போ, என்னைத் தூக்கிட்டு `பாப்பா’ எனப் பாசம் பொழிந்த டைரக்டர்ஸ் பலரும் இப்பவும் என்னைக் குழந்தையா நடத்தறாங்க. என் அப்பா இப்போ இல்லைன்னாலும், அவர் எனக்கு வழிகாட்டிக் கொடுத்த மீடியா பயணத்தை என் இறுதி மூச்சு வரை தொடரணும். அதுதான் என் ஆசை. அப்பா இறந்ததுக்கு அப்புறம் கேமராதான் என் அப்பா. எப்பவும் சீன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி கண்ணை மூடி, அப்பாவை நினைச்சுப்பேன். முதல் சீரியலில் `நாகேஷ்’ தாத்தாவோடு நடிச்சேன். அவர் எவ்வளவு பெரிய லெஜண்ட் என அந்தக் குழந்தை வயசில் தெரியாது. அவரோடு ஜாலியா விளையாடுவேன். ஷீட்டிங் ஸ்பாட்ல என்கிட்ட நிறைய விடுகதைகள் கேட்பார். அவர் நடிகர் மட்டுமல்ல; மிகப்பெரிய ஜீனியஸ். அத்தனை அழகா கணக்குப் போடுவார். சின்ன சின்ன விஷயங்களை தெளிவா புரியவைப்பார். அவருடன் நடிச்சது என் பாக்கியம்” எனச் சிலிர்க்கிறார் அஷ்ரிதா.

இவரின் அம்மாவும் சீரியலில் நடித்தவர். “அப்பா இறந்ததுக்கு அப்புறம் அவங்க நடிக்க விரும்பலை. இன்னும் கொஞ்ச வருஷத்துல ரீ-என்ட்ரி கொடுப்பேன்னு சொல்லியிருக்காங்க. என் அண்ணனும் அம்மாவும்தான் எனக்கு ஃபுல் சப்போர்ட். என் காஸ்டியூம்ஸ், மேக்கப் விஷயங்களை அம்மா பார்த்துப்பாங்க. ஜீ தமிழ் டிவியில் நடிக்கும்போது, தீபக் அண்ணாவும், ஶ்ரீ அண்ணாவும் எனக்கு ரொம்ப குளோஸ். `இப்படி நடி, அப்படி நடி’னு நிறைய டிப்ஸ் கொடுப்பாங்க.

naam iruvar namakku iruvar serial asritha

சீனியர் ஆர்ட்டிஸ்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்னு பார்க்க மாட்டேன். என் வளர்ச்சியை விரும்பி, ஒரு செயலை மாற்றிக்க யார் சொன்னாலும் கேட்டுப்பேன். என் ஷாட் முடிஞ்சதும், ரூமுக்குள்ளே போய் உட்கார்ந்துடமாட்டேன். மத்தவங்க எப்படி நடிக்கிறாங்க, அவங்ககிட்ட எதை கத்துக்கலாம்னு கவனிப்பேன். இது, அப்பா எனக்குச் சொல்லிக்கொடுத்த பால பாடம். டப்பிங்கிலும் எனக்கு ஆர்வம் இருக்கு. சீக்கிரமே ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் என்னைப் பார்க்கலாம். என் அப்பாவுக்கு நான் ஹீரோயின் ஆகணும்னு ஆசை. அவர் ஆசையை நிறைவேற்றுவேன்” என நிறைவுடன் புன்னகைக்கிறார் அஷ்ரிதா.

Advertisement