ரைட்டு, CWCல இப்படி தான் சமைப்பாங்களா, ரகசியத்தை போட்டுடைத்த ராகுல் தாத்தா – டைட்டில் வின்னர் ஸ்ருதிகா சொன்ன உண்மை.

0
605
sruthika
- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமைப்பது குறித்து ஸ்ருத்திகா போட்டு உடைத்த உண்மை வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு என்றே ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. புது வித்தியாசமான முறையில் இந்த சமையல் நிகழ்ச்சியை விஜய் டிவி அறிமுகம் செய்து இருக்கிறது.

-விளம்பரம்-

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்றாவது சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் காரணமே. அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் சீசனுக்கு சீசன் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மாறினாலும் கடந்த 3 சீசன்களாக மாறாமல் இருப்பது நிகழ்ச்சியின் நடுவர், தொகுப்பாளர் தான்.

- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 3 :

வழக்கம் போல் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி இந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, சந்தோஷ் பிரதாப், ராகுல் தாத்தா, வித்யூலேகா, ரோஷினி, ஸ்ருதிகா, அம்மு அபிராமி, தர்சன் என்று பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். அதேபோல் கோமாளியாக சிவாங்கி, புகழ், பாலா, மணிமேகலை, சுனிதா, குரேஷி, மூக்குத்தி முருகன், பரத் போன்ற பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியில் பல வித்தியாசமான கான்செப்ட்களை கொண்டு வந்து இருந்தார்கள்.

டைட்டில் வின்னர்:

இறுதியில் வித்யூலேகா, ஸ்ருதிகா, தர்சன், அம்மு அபிராமி, சந்தோஷ், கிரேஸ் ஆகியோர் இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருந்தார்கள். சமீபத்தில் கோலகலமாக குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி முடிவடைந்தது. 4 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றது. இதில் ஸ்ருத்திகா டைட்டில் வின்னர் ஆனார். மேலும், வெற்றி பெற்ற ஸ்ருத்திகாவுக்கு பரிசு தொகை 5 லட்சம் ரூபாயும், ஒரு லட்சம் ரூபாய்க்கு ப்ரீத்தியின் வீட்டு உபயோக பொருட்களும் பரிசாக கொடுக்கப்பட்டது. கோமாளியாக இருந்த புகழுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

ராகுல் தாத்தா சொன்ன சர்ச்சை:

பலரும் ஸ்ருதிக்கா வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் தாத்தா ஒரு பேட்டியின் போது நிகழ்ச்சி குறித்து அவர் கூறி இருந்தது சர்ச்சையானது. அதாவது, முதல் நாளே அடுத்த நாள் என்ன சமைக்க வேண்டும் என்று அனுப்பி விடுவார்கள் என்று கூறியிருந்தார். இது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இவ்வளவு நாள் நிகழ்ச்சியில் நிற்கும்போது தான் சர்ப்ரைசாக அன்றைய தினம் என்ன சமைக்க வேண்டும் என்பதை நடுவர்கள் வெளிப்படுத்துவார்கள்.

சமையல் குறித்து ஸ்ருத்திகா சொன்னது:

இதை நாமும் இத்தனை காலம் நம்பிக்கொண்டு இருந்தோம். ஆனால், ராகுல் தாத்தா கூறி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்து. இந்நிலையில் இதுகுறித்து டைட்டில் வின்னர் ஸ்ருத்திகாவிடம் சமீபத்திய பேட்டியில் கேட்டபோது, அது போல எல்லாம் ஒன்றும் கிடையாது. அங்கு சென்ற பின்பு தான் அவர்கள் என்ன சமைக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதில் நாங்கள் வித்தியாசமாக என்ன செய்ய முடியும் என்று சிந்தித்து உணவுகளை சமைப்போம் என்று கூறியிருந்தார்.

Advertisement