விவாகரத்துக்கு பின் ஒரே மேடையில் சமந்தா,நாக சைதன்யா- வைரலாகும் வீடியோ

0
500
- Advertisement -

விவாகரத்திற்கு பின் சமந்தா- நாக சைதன்யா இருவரும் ஒரே மேடையில் இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் படு ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இந்தியாவின் பல மொழி படங்களில் நடிகை சமந்தா நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

இதனிடையே சமந்தா அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். மேலும், இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா -நாகா சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

சமந்தா-நாக சைதன்யா பிரிவு:

இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பின் இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், கருத்துக்களும் எழுந்த வண்ணம் இருந்தது. ஆனால், இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்று இதுவரையும் தெரியவில்லை. அது மட்டும் இல்லாமல் பிரிவிற்கு பிறகு இருவருமே எந்த ஒரு சினிமா நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக கலந்து கொள்வதில்லை. பிரிவிற்கு பின் இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

சமந்தா கேரியர்:

அந்த வகையில் புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார் சமந்தா. அதை தொடர்ந்து சமந்தா பல படங்களில் நடித்து இருந்தார். சமீப காலமாக இவர் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். இறுதியாக இவர் லீட் ரோலில் நடித்த யசோதா மற்றும் சாகுந்தலம் ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் தோல்வியை தழுவியது. இதனால் சமந்தா அதிக வேதனையில் இருந்தார். கடைசியாக விஜய் தேவர்கொண்டாவுடன் இவர் நடித்த குஷி படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

நாக சைதன்யா கேரியர்:

சமந்தாவிற்கு இது ஒரு கம்பேக் படமாக அமைந்து இருந்தது. தற்போது இவர் வெப் சீரிஸ், படங்கள் என்று பிசியாக நடித்து வருகிறார். அதேபோல் நாக சைதன்யாவும் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் இவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் அமேசான் ப்ரைம் நிகழ்ச்சியில் சமந்தா- நாகா சைதன்யா கலந்திருக்கும் தகவல் தான் வெளியாகி இருக்கிறது. அதாவது 2024 இல் வர இருக்கும் ஷோக்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாக அமேசான் ப்ரைம் நிறுவனம் இன்று நடத்திருக்கிறது.

சமந்தா- நாக சைதன்யா வீடியோ:

இதில் சமந்தா நடித்த Citatel Honey Bunny சீரிஸ் மற்றும் நாக சைதன்யா நடித்த Dhootha என்ற தெலுங்கு வெப் சீரிஸ் உட்பட பல நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்போது சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருமே நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்கள். ஆனால், ஒரே நேரத்தில் இருவரும் மேடையில் ஏறவில்லை. தனித்தனியாக தான் இருவரும் மேடையில் நின்று தங்களுடைய படங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Advertisement