25 லட்சம் போச்சுன்னு சொல்றாங்க, ஒன்றை வருஷம் என் மன உளைச்சல புரிஞ்சிக்க மாற்றாங்க – நாகேந்திர பிரசாத் வேதனை.

0
462
- Advertisement -

சென்னை தேனாம்பேட்டையில் நடிகர் நாகேஷ் நாகேந்திர பிரசாத்திற்கு வீடு ஒன்று இருக்கிறது. அந்த வீட்டை விக்னேஷ் என்பவருக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார். அவரிடம் எஸ்டிஎஸ்கே பிராபர்ட்டி டெக் என்ற நிறுவனத்திற்கு வீட்டை லீசுக்கு விட்டிருக்கிறார்கள்.அதுமட்டுமில்லாமல் அவர்களிடம் இருந்து 25 லட்சம் ரூபாயை கொடுத்து விடுங்கள். அவர்கள் மாதாமாதம் 36,000 தங்களுக்கு வாடகை செலுத்தி விடுவார்கள் என்று நாகேந்திர பிரசாந்தின் மனைவி சொல்லி இருக்கிறார். அதன் பின் தான் விக்னேஷ் அந்த வீட்டிற்கு குடியேறி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், ஒரு வருடம் ஆகியும் வீட்டு வாடகை எஸ் டி எஸ் கே ப்ராடக்ட் நிறுவனம் தராமல் தலைமறைவாக இருக்கிறது இந்த நிலையில் வீட்டு வாடகை தரவில்லை என்று நாகேந்திர பிரசாத் தன்னுடைய ஆட்கள் மூலம் வீட்டை பூட்டி வெல்டிங் வைத்திருக்கிறார்.வீட்டில் விக்னேஷ் வளர்த்த வளர்ப்பு பிராணி உள்ளே வைத்து பூட்டி இருக்கிறார். இதைப் பார்த்து விக்னேஷ் மற்றும் அவருடைய மனைவி அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதை அடுத்து போலீசார் விரைந்து வந்து வெல்டிங் அடித்த பூட்டை உடைத்து சீலை எடுத்து இருக்கின்றனர். மேலும் இது தொடர்பாக நாகேந்திர பிரசாத் மீது புகார் அளித்திருக்கிறார்கள்.இது குறித்து நாகேந்திர பிரசாத், இது என்னுடைய வீடு. என்னோட வீட்டுக்கு தான் நான் பூட்டு போட்டேன். அது ஒன்றும் தப்பில்லை. அவருடன் எந்த ஒரு அக்ரிமென்டும் நான் போடவில்லை. யாருக்கு பணத்தை கொடுத்தார் என்பது எனக்கு தெரியாது என்று கூலாக பதில் சொல்லி இருக்கிறார்.

தற்போது இந்த வழக்கை போலீசார் விசாரணை செய்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள நாகேந்திர பிரசாத் ‘ எல்லா நடிகர்களையும் போல நானும் ஒரு ஏஜென்சி மூலமாக தேனாம்பேட்டையில் உள்ள என்னுடைய வீட்டை வாடகைக்கு கொடுத்திருந்தேன். அந்த ஏஜென்சி எனக்கு மாத வாடகையாக 36 ஆயிரம் ரூபாயை கொடுத்தார்கள்.

-விளம்பரம்-

முதல் ஒரு வருடம் மாத மாதம் சரியாக வாடகை வந்து கொண்டு இருந்தது ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அந்த ஏஜென்சி யில் இருந்து எனக்கு வாடகை கிடைக்கவில்லை அந்த ஏஜென்சியையும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் வீட்டில் இருந்தவர்களை காலி செய்ய சொல்லி நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால், அவர்களோ நாங்கள் வாடகைக்கு வரவில்லை 25 லட்சத்திற்கு லீஸுக்கு எடுத்து இருக்கிறோம் என்று சொன்னார்கள்.

எனவே அவர்களிடம் நான் எந்த லீஸ் அக்ரிமெண்ட்டையும் போடவில்லை நான் வாடகைக்கு தான் விட்டிருந்தேன் என்று வீட்டை காலி செய்யச் சொன்னேன். அவர்களும் பரிதாபமாக இரண்டு மாதம் அவகாசம் கேட்டார்கள். ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் அவர்கள் வீட்டை காலி செய்யாமல் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம் அதன் பின்னர் நாங்கள் வீட்டை காலி செய்வதாக சொன்னார்கள்.

இதனால் நான் போலீஸிடம் சென்று புகார் கொடுத்தேன் அவர்களும் பலமுறை அவர்களை காலி செய்ய சொன்னார்கள். அப்போதும் அவர்கள் காலி செய்யவில்லை ஒன்றரை வருடமாக வீட்டிற்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் அலைந்து மன உளைச்சல் ஆனது தான் மிச்சம். இதனால்தான் வீட்டிற்கு வெல்டிங் வைத்து பூட்டு போட வேண்டியதாக ஆகிவிட்டது. ஆனால், எனக்கு நாய் உள்ளே இருப்பது தெரியாது. தெரிந்திருந்தால் அப்படி செய்திருக்க மாட்டேன்.

அதே போல அந்த வீட்டின் உரிமையாளர்களும் நாயை ஒரு ரூமுக்குள் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் எப்படிப்பட்ட மனிதர்களாக இருப்பார்கள். அவர்கள் 25 லட்சம் ஏமாந்து விட்டதாக சொல்கிறார்கள். ஆனால், கடந்த ஒன்றரை வருடமாக வாடகை வராமல் எனக்கு எவ்வளவு இழப்பாக இருக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. என் அண்ணன் பிரபுதேவா என்பதால் நான் என்ன செய்ய முடியும். நான் என்ன பிரபுதேவாவா? நானும் ஒரு சராசரி மனிதன் தான் எனக்கும் குடும்பம் மனைவி குழந்தைகள் எல்லாம் இருக்கிறது நானும் லோன் கட்ட வேண்டும் நிறைய கமிட்மெண்ட் இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

Advertisement