‘மாயா மச்சிந்திரா இதெல்லாம் நியாயமா’- வாடகைக்கு குடியிருந்தவர் வீட்டை பூட்டி வெல்டிங் வைத்த பிரபுதேவாவின் சகோதரர் – அவர் கொடுத்த விளக்கத்தை கேளுங்க.

0
407
- Advertisement -

நடிகர் பிரபுதேவாவின் சகோதரர் வீட்டில் குடியிருந்தவரை வீட்டிற்குள் வைத்து பூட்டி துன்புறுத்தி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர் நாகேந்திர பிரசாத். இவர் நடன இயக்குனர் சுந்தரத்தின் மகன் ஆவார். அது மட்டும் இல்லாமல் பிரபல நடிகரும், நடன இயக்குனருமான பிரபு தேவாவின் தம்பி ஆவார்.

-விளம்பரம்-

பாம்பே படத்தில் இடம்பெற்ற ஹம்மா ஹம்மா என்ற பாடலுக்கு நடனமாடி பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் நாகேந்திர பிரசாத். அதனை தொடர்ந்து இவர் ஜீன்ஸ், நினைவிருக்கும் வரை, சாக்லேட், மின்னலே போன்ற பல படங்களில் நடித்தும் இருக்கிறார் . மேலும், பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். இருந்தாலும், இவரால் தன்னுடைய அண்ணன் பிரபுதேவாவை போல் சினிமாவில் நிலைத்து நிற்க முடியவில்லை.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் ராஜேந்திர பிரசாந்த் மீது எழுதியிருக்கும் புகார் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, சென்னை தேனாம்பேட்டையில் நடிகர் நாகேஷ் நாகேந்திர பிரசாத்திற்கு வீடு ஒன்று இருக்கிறது. அந்த வீட்டை விக்னேஷ் என்பவருக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார். அவரிடம் எஸ்டிஎஸ்கே பிராபர்ட்டி டெக் என்ற நிறுவனத்திற்கு வீட்டை லீசுக்கு விட்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் அவர்களிடம் இருந்து 25 லட்சம் ரூபாயை கொடுத்து விடுங்கள். அவர்கள் மாதாமாதம் 36,000 தங்களுக்கு வாடகை செலுத்தி விடுவார்கள் என்று நாகேந்திர பிரசாந்தின் மனைவி சொல்லி இருக்கிறார். அதன் பின் தான் விக்னேஷ் அந்த வீட்டிற்கு குடியேறி இருக்கிறார். மேலும், ஒரு வருடம் ஆகியும் வீட்டு வாடகை எஸ் டி எஸ் கே ப்ராடக்ட் நிறுவனம் தராமல் தலைமறைவாக இருக்கிறது இந்த நிலையில் வீட்டு வாடகை தரவில்லை என்று நாகேந்திர பிரசாத் தன்னுடைய ஆட்கள் மூலம் வீட்டை பூட்டி வெல்டிங் வைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

நாகேந்திர பிரசாத் மீது புகார்:

வீட்டில் விக்னேஷ் வளர்த்த வளர்ப்பு பிராணி உள்ளே வைத்து பூட்டி இருக்கிறார். இதைப் பார்த்து விக்னேஷ் மற்றும் அவருடைய மனைவி அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். இதை அடுத்து போலீசார் விரைந்து வந்து வெல்டிங் அடித்த பூட்டை உடைத்து சீலை எடுத்து இருக்கின்றனர். மேலும் இது தொடர்பாக நாகேந்திர பிரசாத் மீது புகார் அளித்திருக்கிறார்கள்.

நாகேந்திர பிரசாத் கொடுத்த விளக்கம்:

இது குறித்து நாகேந்திர பிரசாத், இது என்னுடைய வீடு. என்னோட வீட்டுக்கு தான் நான் பூட்டு போட்டேன். அது ஒன்றும் தப்பில்லை. அவருடன் எந்த ஒரு அக்ரிமென்டும் நான் போடவில்லை. யாருக்கு பணத்தை கொடுத்தார் என்பது எனக்கு தெரியாது என்று கூலாக பதில் சொல்லி இருக்கிறார். தற்போது .இந்த வழக்கை போலீசார் விசாரணை செய்து வருகிறது.

Advertisement