பொண்ணுங்களே இப்படி எனக்கு மெசேஜ் பண்றது தான் கஷ்டமா இருக்கு – மனைவி குறித்த விமர்சனங்களுக்கு நகுல் பதில் .

0
623
nakhul
- Advertisement -

‘உங்கள் மனைவியை கட்டுப்படுத்துங்கள்’ என்று விமர்சித்த நபருக்கு பதிலடி கொடுத்த நகுலின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நகுல். இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் மாசிலாமணி, காதலில் விழுந்தேன், கந்தக்கோட்டை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் நகுல் பிரபல நடிகை தேவயானியின் உடன் பிறந்த தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இவர் பயங்கர குண்டாக இருந்தாராம். நடிப்பிற்காக இவர் தன்னுடைய உடலை பாதியாக குறைத்து நடிக்கத் தொடங்கினார். பின் இவர் பல ஆண்டுகளாக ஸ்ருதி என்பவரை காதலித்து வந்தார். பின் இவர்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

- Advertisement -

நகுல் அழகிய குடும்பம்:

இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை இருக்கிறது. அந்த குழந்தைக்கு அகிரா என்று பெயர் வைத்துள்ளார்கள். சின்ன இடைவெளிக்கு பிறகு மீண்டும் நகுல் சின்னத்திரையில் ஜோடி நடுவராக இருந்தார். பின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராகவும் களம் இறங்கி இருக்கிறார். இது ஒரு பக்கமிருக்க நகுலின் மனைவி சுருதி எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். சுருதி தன் கணவர் மற்றும் குழந்தையுடன் சேர்ந்து எடுக்கும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் அவ்வபோது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

ஸ்ருதி போட்ட வீடியோ:

nakkh

இதனால் இவரை சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கான பேர் ஃபாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் சுருதி அவர்கள் ஆண், பெண் சமத்துவத்தை குறித்து வீடியோ ஒன்றை போட்டிருந்தார். இதற்கு பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் தான் போடும் வீடியோக்களுக்கு எதிர் மறையாக பேசுபவர்களுக்கு சுருதி நேரடியாக பதில் கொடுத்து வந்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் நடிகர் நகுலுக்கு சில தினங்களாகவே ஸ்ருதி குறித்து போஸ்ட் வந்துகொண்டே இருக்கிறது.

-விளம்பரம்-

நகுலிடம் விமர்சித்த நபர்கள்:

அது என்னவென்றால், உங்களுடைய மனைவியை தயவுசெய்து கட்டுப்படுத்துங்கள் என்று கூறியிருக்கிறார்கள். உடனே இதற்கு விளக்கம் கொடுத்து நகுல் வீடியோ ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, எல்லோரும் என் மனைவியை கட்டுப்படுத்துங்கள் என்று மெசேஜ் அனுப்புகிறீர்கள். ஏன் நான் என் மனைவியை கட்டுபடுத்த வேண்டும்? நான் எப்படியோ அதே போல் தான் ஸ்ருதியும் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நான் ஒரு பெண்ணியவாதி.

நகுல் பதிலடி கொடுத்த வீடியோ:

எப்போதும் பெண்களை கட்டுப்படுத்தி வைக்க கூடாது. அவர்களுக்கும் சம உரிமையை கொடுக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் இதைப்பற்றி எனக்கு அதிகமாக பெண்கள் தான் மெசேஜ் பண்ணினார்கள் என்பதை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது. உங்களையும் இந்த மாதிரி கட்டுப்படுத்த நினைத்தால் நீங்கள் விரும்புவீர்களா? என்று நகுல் கேட்டிருக்கிறார். இப்படி பதிவிட்ட வீடியோவை ஸ்ருதி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

Advertisement