‘அவங்கள சாகும் வர ஜெயிலில் போடணும்’ ரஜினியின் ஆவேச பேட்டி- காரணம் இது தான்.

0
258
- Advertisement -

சாகும் வரை அவர்களை ஜெயிலில் போட வேண்டும் என்று நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் ஆவேசமாக பேசி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். என்பது காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு தான் இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த அளவிற்கு இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதுமே ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் உலக அளவிலும் நல்ல வசூல் சாதனை செய்திருந்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்து சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த லால் சலாம் படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. தற்போது ஞானவேல் இயக்கத்தில் ரஜினி அவர்கள் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் இன்னும் சில இயக்குனர்களின் படத்திலும் ரஜினி கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

மருத்துவமனை திறப்பு விழா:

இந்த நிலையில் ரஜினிகாந்த் அவர்கள் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்று இருந்தார். அங்கு அவர், 25 வருடமாக நான் எந்த ஒரு திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கு போவது கிடையாது. காரணம், எந்த ஒரு கட்டிடத்தை திறந்து வைத்தாலுமே அதில் ரஜினிக்கு பங்கு இருக்கிறது, அந்த நிறுவனத்துடன் ரஜினிக்கு தொடர்பு இருக்கிறது, அதில் அவர் பார்ட்னராக இருக்கிறார், அந்த நிறுவனமே ரஜினி பினாமியில் தான் நடத்துகிறார்கள் என்றெல்லாம் பல வதந்திகள் கிளப்பிக்கிறார்கள்.

ரஜினி ஆவேச பேட்டி:

மேலும், நான் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு காரணம் என்னுடைய உடம்பு பல மருத்துவமனைகளின் மூலமாக தான் குணம் அடைந்திருக்கிறது. டாக்டர்கள், நர்ஸ்சுகள் மீது எனக்கு நிறைய மரியாதை இருக்கிறது. அவர்களுடைய உதவியால் தான் நான் இன்று உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், ஸ்கூல், மளிகை கடை, மார்க்கெட் என பல தொழில்களுக்கு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால், மருத்துவமனைக்கு என்று யாருமே விளம்பரம் செய்வதில்லை.

-விளம்பரம்-

மருத்துவமனை குறித்து சொன்னது:

அதைவிட மருத்துவமனை தான் ரொம்ப முக்கியம். இப்போது யாருக்கு எந்த வயதில் வியாதி வருகிறது என்று சொல்லவே முடியாது. அந்த அளவிற்கு நோய்கள் பரவிக் கொண்டிருக்கிறது. சுவாசிக்கும் காற்று , குடிக்கும் தண்ணீர் கூட இப்போது மாசடைந்து விட்டது. சொல்லப்போனால், குழந்தைகள் மருந்தில் கூட கலப்படம் செய்து கொடுக்கிறார்கள். அவர்களெல்லாம் சாகும் வரைக்கும் ஜெயிலில் போடணும் என்றெல்லாம் பேசி இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, ரஜினி அவர்கள் நிறைய சமூக சேவைகளை செய்து கொண்டு வருகிறார்.

ரஜினி கட்டும் மருத்துவமனை:

அந்த வகையில் இவர் சென்னையில் ஓம்.எம்.ஆர் சாலையில் இருந்து தாழம்பூர் செல்லும் வழியில் 12 ஏக்கர் நிலத்தில் மருத்துவமனை கட்ட இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் அளிக்கப்பட இந்த மருத்துவமனை கட்டப்படுகிறது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலருமே பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். கூடிய விரைவில் இந்த மருத்துவமனை குறித்த விவரம் தெரிய வரும்.

Advertisement