சினிமா வாய்ப்பு தருவதாக மாணவியிடம் ரூமில் நந்தா நடிகர் செய்த செயல், மாணவியின் நண்பர்கள் போட்ட பலே திட்டம்.

0
192
- Advertisement -

நந்தா பட நடிகர் மது சூதனன் என்பவர் கல்லூரி மாணவி மீது புகார் அளித்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நந்தா. படத்தில் நீதிமன்ற காமெடி காட்சியில் நீதிபதியாக நடித்திருந்தவர் தான் மதுசூதனன். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் மருத்துவர் ஆவார். இவர் கொரட்டூரை சேர்ந்தவர். இவர் சென்னை, கோயம்புத்தூர், பாலக்காடு போன்ற பகுதிகளில் ஹாப்பி ஹோம்ஸ் என்ற முதியோர் இல்லத்தை நடத்தி வருகிறார். திரை உலகில் இருக்கும் நண்பர்கள் மூலம் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

இப்படி இருக்கும் நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி கொரட்டூர் ஒத்தாண்டீஸ்வரர் கோவில் அருகே தன்னுடைய காரை நிறுத்தி சிறுநீர் கழிக்க சென்றிருக்கிறார். அப்போது கல்லூரி மாணவி தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து இவரிடம் மிரட்டி இரண்டு மோதிர தங்க நகைகளை பறித்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்றிருப்பதாக போலீசில் புகார் அளித்திருக்கிறார். இதனை அடுத்து போலீஸில் மருத்துவர் மதுசூதனிடம் வழிப்பறையில் ஈடுபட்ட கல்லூரி மாணவி லோகேஸ்வரி, அவருக்கு உதவிய நண்பர்கள் சையது, சரண் ஆகியோரை கைது செய்து இருக்கிறார்கள்.

- Advertisement -

மதுசூதனன் புகார்:

பின் மருத்துவர் உடைய மோதிரம் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதை அடுத்து போலீசார் விசாரணை நடத்திய போது தான் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மருத்துவர் மதுசூதனன் கல்லூரி மாணவி லோகேஸ்வரிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாக தெளிய வந்திருக்கிறது. மேலும், இது தொடர்பாக விசாரணையில் வீடியோ ஒன்றும் வெளியாகியிருக்கிறது. விசாரணையில், கல்லூரி மாணவி லோகேஸ்வரி பகுதி நேரமாக மசாஜ் சென்டரில் வேலை செய்கிறார்.

போலீஸ் விசாரணை:

அங்கு மதுசூதனன் மசாஜ் செஞ்சு இருக்கிறார். அப்போது கல்லூரி மாணவி மாணவி இடம் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக மதுசூதனன் சொல்லியிருக்கிறார். இதனால் அந்தக் கல்லூரி மாணவியும் ஆசைப்பட்டு தன்னுடைய தோழி உடன் மதுசூதனன் சொன்ன தோப்பு வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு மதுசூதனன் தன்னுடைய நண்பர்களுடன் குடிபோதையில் மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். உடனே மாணவி தன்னுடைய நண்பர்களுக்கு கால் செய்து வர வைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மதுசூதனன் செய்த வேலை:

அப்போது மாணவியும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து மதுசூதனனை அடித்து மன்னிப்பு கேட்டு இருக்கிறார். இதனால் மதுசூதனன், வெளியில் சொன்னால் என்னுடைய பெயர் கெட்டுப் போய்விடும் மன்னித்து விடுங்கள். நான் இது போல் தவறு செய்யமாட்டேன் என்று தன்னிடம் இருந்த இரண்டு மோதிரங்களை கழட்டித் தந்திருக்கிறார். இதை சாதகமாக வைத்து அந்த கல்லூரி மாணவியும் அவருடைய நண்பர்களும் மதுசூதனனிடம் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார்கள்.

விசாரணையில் போலீஸ் கூறியது:

இதனால் மதுசூதனன் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி கல்லூரி மாணவியின் மீது பொய்யான புகழ் அளித்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வருகிறது. மேலும், பாலியல் தொல்லை மதுசூதனன் கொடுத்திருக்கிறார் என்று கல்லூரி மாணவி புகார் அளித்திருந்தாலே அவரை கைது செய்திருப்பார்கள். ஆனால், பணத்திற்காக ஆசைப்பட்டு கல்லூரி மாணவி தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து அவரிடம் மிரட்டி பணத்தை கேட்டிருக்கிறார்கள். தற்போது கல்லூரி மாணவி லோகேஸ்வரி மற்றும் அவருடைய நண்பர்களை போலீசார் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Advertisement