குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெங்கடேஷ் பட் விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. அதோடு இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இதுவரை நான்கு சீசன்கள் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்து இருக்கிறது. கூடிய விரைவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருக்கிறார்கள். நான்கு சீசன்களிலும் இவர்கள் தான் நடுவர்களாக இருந்தார்கள். இவர்கள் இருவருமே ஏற்கனவே பல டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றனர். மேலும், இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் படு பேமஸ் ஆனவர் வெங்கடேஷ் பட். இவர் இந்தியா முழுக்க உள்ள பல்வேறு ஹோட்டல்களில் சிறப்பு செஃப்பாக இருக்கிறார். இவர் அசைவம் சாப்பிடுவது இல்லை என்றாலும் வெறும் வாசனையை வைத்தே அதில் இருக்கும் உப்பு முதல்கொண்டு சொல்லிவிடுவார்.
குக் வித் கோமாளி:
அந்த அளவிற்கு மிகவும் திறமையான ஒரு செஃப்பாக தான் இவரை சொல்ல வேண்டும். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருக்கிறார். இருந்தாலும், அந்த நிகழ்ச்சியில் இவர் மிகவும் கறாரான நடுவராக இருந்தவர். பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அப்படியே மாறி மிகவும் ஜாலியான ஒரு நடுவராக மாறி இருக்கிறார். சமையல் நிகழ்ச்சியை விட இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்தது என்பதை மறுக்க முடியாத உண்மை.
வெங்கடேஷ் பட் குறித்த தகவல்:
தற்போது இவர் தன்னுடைய யூடியூப் பக்கத்தில்கூட சமையல் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் நிறைய பைவ் ஸ்டார் ஓட்டல்களில் சீஃப் செப்பாக இருக்கிறார். சமீபத்தில் தான் இவர் புதிதாக ஆன்லைன் மூலம் கிட்சன் செட் பிஸ்னஸ் துவங்கி இருக்கிறார். அதற்கு Vbdace என்று பெயர் வைத்து இருக்கிறார். இந்த நிலையில் குக் வித் கோமாளி 5 சீசனில் நடுவராக வெங்கடேஷ் கலந்து கொள்ள மாட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக சோசியல் மீடியாவில் வெங்கடேஷ் பட், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் உடைய புதிய சீசன் தொடங்க இருக்கிறது.
வெங்கடேஷ் பட் பதிவு:
சில மாதங்களாகவே அதற்கான செய்திகள் எல்லாம் வெளியாகி வருகிறது. சீசன் 5ல் நான் நடுவராக தொடர்வேன் என்றெல்லாம் கூறப்படுகிறது. ஆனால், நான் புதிய சீசனில் பங்கேற்கவில்லை. இதை நான் தெளிவுபடுத்துகிறேன். என்னையும் சேர்த்து பல லட்சம் பேரை மகிழ்விக்கும் அந்த அற்புதமான நிகழ்ச்சியில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்கிறேன். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான் என்னுடைய ஜாலியான பக்கத்தை காட்ட முடிந்தது. நான் நானாக இருக்க வசதியை ஏற்படுத்தி தந்தது.
நிகழ்ச்சியை விட்டு விலக காரணம் :
24 ஆண்டுகளுக்கும் மேலாக நான் அங்கம் வகித்த சேனலுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு மற்ற வாய்ப்புகளை நோக்கி செல்ல முடிவெடுத்து இருக்கிறேன். நிகழ்ச்சியின் இயக்குனர் உட்பட அனைவருக்குமே நன்றி. மன அழுத்தத்தில் இருக்கும் பலருக்கும் அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது. இந்த முடிவு ஒரு கடினமான முடிவாக இருந்தாலும் அதில் நான் உறுதியாக இருக்கிறேன். விரைவில் வர இருக்கும் வித்தியாசமான நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.
கடந்த சீசனில் ஏற்பட்ட கசப்புகள் :
அது குறித்து யூகித்துக் கொண்டிருங்கள். நன்றி என்று கூறியிருக்கிறார். குக்கு வித் கோமாளியில் இரண்டு நடுவர்கள் இருந்தாலும் இதில் வெங்கடேஷ் பத் தான். அதிலும் இவர் கோமாளிகளிடம் கடுமையாக நடந்துகொள்கிறார் என்று இவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தது. இதற்கெல்லாம் அடிக்கடி விளக்கம் கொடுத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இந்த கசப்புகளால் இந்த முடிவை எடுத்தாரா என்பது தெரியவில்லை.