நூல் வெளியீட்டு விழாவில் தொல் திருமாவளவன் எம்பியை புகழ்ந்து இயக்குனர் பா ரஞ்சித் பேசி இருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா சாலையில் கவிஞர் மௌனன் யாத்திரிகாவில் ‘எருமை மறம்’ என்ற நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றிருக்கிறது. இதில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் எம் பி கலந்து கொள்ள சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூலை வெளியிட்டு இருக்கிறார். மேலும், இந்த நூலை பா ரஞ்சித் வாங்கி இருக்கிறார்.
இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா ரஞ்சித் அவர்கள் கூறியிருப்பது, சமீப காலவாகவே நாம் பல தலைவர்களை பார்த்திருப்போம். ஆனால், மக்களுக்காக தன்னுடைய வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. இது ரொம்ப முக்கியமான ஒன்று. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததிலிருந்து தூங்கும் வரை மக்களுக்காகவே பேசி, அவர்களுக்காகவே சிந்தித்து, அவர்களுடைய நலனை பற்றியே யோசித்து, தன்னுடைய நலன்களை கூட பார்க்காமல் இருக்கிறார் திருமா அண்ணா.
நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் சொன்னது:
எனக்கு அவர் மேல் ஒரு பொறாமை கூட இருக்கிறது. காரணம், நான் ஒரு வித்தியாசமான ஒரு வாழ்க்கை முறை வாழ்கிறேன். இலக்கிய தளத்திலிருந்து சினிமாவில் இயங்குகிறேன். எனக்கு சில விருப்பங்களும் இயக்கங்களும் இருக்கிறது. கலையின் வழியால் என்னை அறிந்து கொண்டேன். அதை கலையின் வழியாக நான் யார் என்பதை சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆனால், திருமா அண்ணா தேர்ந்தெடுத்த செயல், வடிவம், தன் மக்களுக்காக தன்னை ஒப்புவித்தல் என்பது ரொம்ப முக்கியமான ஒன்று.
திருமாவளவன் குறித்து சொன்னது:
அந்த பொறாமை எப்போதுமே அண்ணன் மேல் இருக்கிறது. எல்லோராலும் அது செய்ய முடியாது. அதனால் தான் வெல்லும் ஜனநாயகம் என்ற மிகப்பெரிய மாநாட்டை நடத்தி பல லட்சம் மக்களை திரட்டி இருக்கிறார். இந்தியாவே அசந்து போகிற அளவிற்கு இளைஞர்களை ஒன்று திரட்டி இருக்கிறார். அந்த காட்சியை பார்க்கும் போது நமக்கே ஒரு எழுச்சி வரும். டாக்டர். அம்பேத்கர் பௌத்தத்தை தழுவிய போது அவ்வளவு பெரிய கூட்டத்தை உருவாக்கி இருந்தார். அந்தக் கூட்டத்திலும் இந்த கூட்டத்திலும் எந்த ஒரு வன்முறையும், அசம்பாவிதங்களும் நடக்கவில்லை.
திருமாவளவன் அரசியல்:
இந்திய அரசியலையே திரும்பி பார்க்க வைத்த மிகப்பெரிய கூட்டத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படை எங்களிடம் இருக்கிறது. மிகப்பெரிய படை எங்களிடம் இருக்கிறது. நாங்கள் சாதாரண ஆள் கிடையாது. அதேசமயம் கட்டுப்பாடாக இருக்கிறோம். எங்களுக்கு என்று பண்பாடு இருக்கிறது, அது ஒடுக்குமுறை எதிர்க்கிற பண்பாடு என்று இந்திய தமிழக அரசியலில் ரொம்ப தெளிவாக சொல்லி இருக்கிறார். சினிமா படங்களில் வரும் மாஸ் காட்சி போல நிஜத்தில் நிகழ்த்தி காட்டி இருக்கிறார் திருமா அண்ணா.
தேர்தல் குறித்து சொன்னது:
தன்னைப் பற்றி யார் பாராட்டுவார்கள், தூற்றுவார்கள், யார் கூட நிற்பார்கள், நிற்க மாட்டார்கள் என்று நினைக்காமல் கட்சி மீதும், மக்கள் மீதும் அன்பு, மன உறுதியும் தான் அண்ணனை இந்த இடத்தில் நிறுத்தி இருக்கிறது. அவர் எடுத்திருக்கிற இன்னொரு முடிவு தேர்தலில் பானை சின்னத்தில் தான் ஒட்டு போடுவோம் என்பது அது ரொம்ப முக்கியமானது. அவர் போட்டியிருக்கின்ற தொகுதிகளிலும் அண்ணன் மிகப்பெரிய வெற்றி அடைய நாம் ஆதரவாக நிற்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.