தந்தை இறப்பால் இணைந்த குடும்பம் – தந்தையின் உடலை மாறி மாறி தோலில் சுமந்து சென்ற நாசர் மற்றும் அவரின் சகோதரர்.

0
1916
- Advertisement -

பல காலமாக இருந்து வந்த நாசர் மற்றும் அவரது சகோதரர் சண்டை தற்போது முடிவடைந்துள்ளதாக தெரிகிறது. தற்போது நாசர் தென்னிந்திய சினிமாவிலும் ரசிகர்கள் மத்தியிலும் இவ்வளவு பிரபலமாக இருப்பதற்கு காரணம் நாசரின் தந்தையால் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பல வருடங்களாக ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தையும் நாசர் பிடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் படங்களில் மட்டும் இல்லாமல் வெப் சீரிஸ் களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் நாசரின் தந்தை இறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகர் நாசரின் தந்தை மெஹபூப் பாஷா. தற்போது இவருக்கு 95 வயதாகி இருக்கிறது. அவரது இறுதி ஊர்வலத்தில் நாசரும் அவரின் சகோதரரும் மாறி மாறி தூக்கி கொண்டு சென்றனர். இதன் மூலம் பல நாட்களாக நடைபெற்று வந்த அவர்களின் சண்டை முடிவுக்கு வந்துள்ளது.

- Advertisement -

அவர்களது பிரச்சனை:

சில மாதங்களுக்கு முன்பு நடிகர் நாசர் மீது அவரது சகோதரர் ஒரு புகார் ஒன்று அளித்திருந்தார். அதில் தாயை கவனித்துக் கொள்ளாமல் இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள போவதாக நாசருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். கடந்த 25 வருடங்களாக நாசரின் பெற்றோர்கள் செங்கல்பட்டில் வசித்து வருகிறார்கள். வறுமையில் வாடும் அவர்களுக்கு என் சகோதரர் நாசர் எந்த உதவியும் செய்யவில்லை என்று அவரது சகோதரர் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக நல்ல சங்கத்தில் புகார் தெரிவிக்கும் எந்த பலனும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

அவரது சகோதரர் ஜவஹர் சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து அவர் கூறியிருந்தார். இதற்கு அனைத்திற்கும் காரணம் அவரது மனைவிதான். பெற்றோரை பத்திரிகையாளர் சந்திப்பில் நேரில் சந்தித்து அழைத்து வந்து கண்ணீருடன் பேசிய ஜவகர், நாசர் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார். இதற்கு காரணம் அவரது மனைவி கமீலா தான் என்றும் நாசருக்கு திருமணமானதிலிருந்து நாங்கள் அவரை சந்திக்க கூட அவரது மனைவி அனுமதி வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

-விளம்பரம்-

தாயை பற்றி கூறியது:

தமது தாயே அவர் வந்து நேரில் பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டது. உடல் நல குறையுடன் இருக்கும் தாயாரின் ஆசை ஒருமுறையாவது வந்து பார்க்க வேண்டும் என்று அவரது அண்ணன் கூறியிருந்தார். அப்போது இது பெரும் சர்ச்சையானது. இருப்பினும் அதன் பிறகு அவரது தந்தை நேற்று இறந்து இறந்துவிட்டார். அவரது இறுதி ஊர்வலத்தில் அவரது அண்ணனும் ஜவஹரும் நாசரும் ஒன்றாக அவரது சவப்பெட்டியை ஊர்வலமாக தூக்கிக்கொண்டு சென்றனர். இருவர்களுக்கும் இருந்த பிரச்சனை முடிந்துள்ளது போல தெரிகிறது.

Advertisement