‘இத பாத்துட்டு உங்க மனைவி எதாவது சொல்லுவாங்களா’ – தனது மனைவி குறித்த கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் அளித்த பதில்.

0
360
- Advertisement -

ஸ்ருதிஹாசன்- லோகேஷ் கனகராஜ் இருவரும் இனிமேல் என்ற ஆல்பம் பாடல் ஒன்றில் பணியாற்றி இருக்கிறார்கள். இதில் ஹீரோவாக லோகேஷ் களமிறங்கி இருப்பது ஆச்சரியம் தான். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்தும், பாடலை கம்போஸ் செய்தும் இருக்கிறார். இந்த பாடல் வரிகளை கமலஹாசன் எழுதி இருக்கிறார். அதோடு இந்த பாடலை கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. நேற்று தான் இந்த பாடல் வெளியாகி காட்டுத்தீயாய் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் இந்த ஆல்பம் பாடல் வெளியீடு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து லோகேஷ் கனகராஜ் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், முதலில் இந்தப் பாடலுக்கு என்னை நடிக்க கூப்பிட்ட போது ரொம்ப சர்ப்ரைஸ் ஆக இருந்தது. அதற்குப் பிறகு அவர்கள் டீம் வந்து எனக்கு ஐடியா சொன்னார்கள். அவர்கள் சொன்ன விதம் எனக்கு பிடித்ததால் இந்த பாடலை பண்ணலாம் என்று தோன்றியது. நான் கமல் சார் பற்றி தான் என்னுடைய கேரியரில் ரொம்ப அதிகமாக பேசி இருக்கிறேன்.

- Advertisement -

இந்தப் பாடலில் நடிக்க ஒத்துக் கொண்டதற்கு மூன்று காரணம் இருக்கிறது.ஒன்று கண்டிப்பாக கமல் சார். இரண்டு ஸ்ருதி. அவர்கள் டீமுடன் பார்த்த வேலை பிடித்தது. மூன்று நாட்களில் ஷூட்டிங் முடிந்து விடும் என்றார்கள். இந்த காரணத்தினால் தான் நான் இந்தப் பாடலில் நடிக்க ஒத்துக் கொண்டேன். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ‘ஒரு நடிகனா உங்கள பாக்கும் போது எதனா சொல்லுவாங்களா’ என்று கேள்வி எழுப்பியதற்கு ‘நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தனிப்பட்ட கேள்விகள் எல்லாம் வேண்டாம் ‘ என்று கூறி நழுவிவிட்டார் லோகேஷ்

உண்மையில் லோகேஷ் கனகராஜ் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் நாள் தான் நீண்டநாள் காதலித்த வந்த ஐஸ்வர்யா லோகேஷை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அத்விகா லோகேஷ் மற்றும் ஆருத்ரா லோகேஷ் என இரண்டு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.ஏற்கனவே பேட்டி ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ் ‘”நான் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டேன்.

-விளம்பரம்-

அதன் பிறகுதான் சினிமாவுக்கும் வந்தேன். எனக்கும் என் மனைவிக்கும் இடையிலான ஒரு புரிந்துணர்வுதான் நான் சினிமாவில் இருப்பதற்குக் காரணம். நான் வேலையை விடும்போது, மனைவியும் வேலையில் இல்லை. கல்யாணமான தொடக்கத்தில் மாதம் 70 ஆயிரம் என இருவரும் சம்பாதித்தோம், குழந்தை பிறந்த பின் நான் மட்டும் வேலைக்குச் சென்றேன். திரைப்பட வாய்ப்புக் கிடைத்த பின் நான் வேலையை விட்டுவிட்டேன். மாத வருவாய் ஒன்றும் இல்லை.

ஒரு முடிவு எடுத்தோம், “எனக்கு இரண்டாவது படம் கிடைக்கும் வரை நீ வேலைக்குப் போ. அது வரைக்கும் எனக்குப் பெரிய வருவாய் இருக்காது” என்றேன். குழந்தைக்கு ஏழு மாதம் இருக்கும் போதே மனைவி வேறொரு. வங்கியில் பணியில் சேர்ந்தார். நான் சினிமாவில் இருந்தேன். இரண்டரை வருடம் அவர் வேலைக்குச் சென்றார். மாநகரம் முடித்த பின்பு அதே தயாரிப்பு நிறுவனத்திற்கு அடுத்த படமும் கையெழுத்திட்டேன். அடுத்த ஒரு வாரத்திலேயே அவரை வேலையை விடச் செய்தேன். இந்தப் புரிதல்தான் என்னைச் சினிமாவில் நிலை நிறுத்தியது’ என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்து.

Advertisement