அக்னிபாத் திட்டத்திற்கு ஆதரவாக நட்டி போட்ட பதிவு – ப்ளூ சட்டையின் குசும்பை பாருங்க.

0
680
- Advertisement -

அக்னி பாதை திட்டம் குறித்து நடிகர் நட்டி பதிவிட்ட டீவ்ட்டிற்கு நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடராஜன் சுப்பிரமணியன். இவரை எல்லோரும் நட்டி என்று தான் அழைப்பார்கள். இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘யூத்’ திரைப்படத்தின் மூலம் தான் ஒளிப்பதிவாளராக சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் ப்ளாக் ஃப்ரைடே, ஜப் வி மேட், ராஞ்சனா உள்ளிட்ட பல இந்தி படங்களிலும் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருடைய நடிப்பில் வெளிவந்த நாளை, சக்கரவியூகம், முத்துக்கு முத்தாக, சதுரங்க வேட்டை போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கர்ணன் படத்திலும் நட்டி நடித்திருந்தார். இருந்தாலும் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது சதுரங்க வேட்டை படம் தான். தற்போது இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

- Advertisement -

அக்னி பாதை திட்டம் :

இந்த நிலை மோடியின் அக்னி பாதை திட்டம் குறித்து நட்டி பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அதாவது, தற்போது இந்திய ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையில் புதிய ஆள் சேர்க்கும் திட்டம் தான் அக்னிபத் திட்டம். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதலே பீகார், உத்தர பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்து.

அக்னி பாதை திட்டம் குறித்த சர்ச்சை:

மேலும், இந்த பணிகளில் சேருபவர்களுக்கு பல்வேறு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என பாஜக ஆளும் மாநில அரசுகளும், மத்திய அரசும் சில துறைகளும் அறிவித்திருந்தார்கள். இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் ரயிலுக்கு தீ வைக்கும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால், அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற முடியாது என பாதுகாப்பு துறை உயர் அதிகாரி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

-விளம்பரம்-

நட்டி போட்ட டீவ்ட்:

ஆனால், பலரும் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் நட்டி அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் அக்னி பாதை குறித்து டீவ்ட் ஒன்று பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் பணியாற்ற வழிவகை செய்யும் மத்திய அரசின் இந்த நிமிஷம் எனக்கு ராணுவத்தில் அனுமதி கிடைத்தால் அனைத்தையும் விட்டு ராணுவத்தில் சேருவேன். தேசமே தெய்வம் என்று பதிவிட்டிருக்கிறார்.

கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்:

இந்த பதிவை கண்ட பலர் நட்டி நடித்த ‘சதுரங்க வேட்டை’ படத்தின் காட்சியின் டெம்ப்ளேட்டான, ‘ஒருத்தன ஏமாத்தணும்னா அவன் ஆசைய தூண்டனும்’ என நெட்டிசன் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். அதே பலரும் சதுரங்க வேட்டை படத்தில் பொய் சொல்லி ஏமாற்றும் காட்சிகளுக்கான டெம்ப்ளேட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ப்ளூ சட்ட மாறனும் நட்டியை கலாய்த்து வந்த கமன்ட் ஒன்றை ஸ்க்ரீன் சாட் எடுத்து பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement