-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

குரூப் டான்சராக இருந்த நாட்டாமை டீச்சருக்கு ஹீரோயின் வாய்ப்பு கொடுத்த முதல் இயக்குனர். படமும் செம ஹிட்.

0
3710
rani

நாட்டாமை படத்தின் டீசரை எல்லாருக்கும் ஞாபகம் இருக்குங்களா??வில்லுப்பாட்டுக்காரன் படத்தில் அறிமுகமான நடிகை ராணி தான் நாட்டாமை படத்தின் டீசர். இவர்களுடைய சொந்த ஊர் ஆந்திரா. இவங்களோட பிறந்தவங்க 6 பேர் மொத்தத்தில பெரிய குடும்பம் என்றும் சொல்லலாம். நடிகை ராணி அப்பா தெலுங்கு சினிமாவில் தயாரிப்பாளராக இருந்தவர். அதுமட்டுமில்லாமல் என்.டி. ராமராவ் நடித்த படங்களை கூட இவர் தான் தயாரிச்சாராம். மேலும், நடிகை ராணி எட்டாம் வகுப்பு வரை தான் படிச்சிருக்காங்க. ஏன்னா, அவங்க வீட்ல பெண் பிள்ளைகளா அதிகமாக படிக்க வைக்கமாட்டாங்களாம்.

-விளம்பரம்-
Image result for nattamai movie teacher name"

மேலும், நடிகை ராணிக்கு சின்ன வயசுல இருந்தே டான்ஸ் ஆடுவதில் அதிக ஆர்வம் . அதோடு அதிக நேரம் டான்ஸ் ஆடிக் கொண்டே தான் இருப்பாராம். மேலும், பாபு மாஸ்டர் கிட்ட குரூப் டான்ஸராக சினிமா உலகத்துல என்ட்ரி ஆனார். அந்த சமயத்துல தான் ஒரு படத்தில்ல குரூப் டான்ஸ் ஆடுவதற்கு ராணிக்கு வாய்ப்பு கிடைத்தது.அப்போ இயக்குனர் கங்கை அமரன் அவர்கள் ராணி கூட்டத்தில் ஆடும் போது அவரை பார்த்திருக்கிறார். யார் ?இந்த பெண் இவ்வளவு அழகா இருக்காங்களே என சொல்லி அவருடைய அடுத்த படத்தில் வில்லுபாட்டுகாரன் படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைச்சது.

மேலும், இந்த படம் 100 நாட்களுக்கு மேல் தியேட்டர்களில் ஓடி நல்ல வசூலை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் தெலுங்கு,தமிழ், மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்து வந்தார். அதோடு இவர் சியான் விக்ரமுக்கு ஜோடியாக தெலுங்கில் ஒரு படம் நடித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நாட்டாமை படத்தில் கிளாமரான டீச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் வேணாம் என்று தவித்தார். ஆனால், படக்குழுவினர் நீங்கள் நடித்தால் தான் நல்லா இருக்கும் என்று சொல்லி நடிக்க வைத்தார்கள்.

-விளம்பரம்-

நாட்டாமை படத்தின் மூலம் தான் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவ்வை சண்முகி படத்தில் நடித்தார் கமல் ஹாசனுடன் நடித்தார்.. இப்படி தொடர்ந்து நடித்து இருக்கும் போது இவருக்கு 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருடைய கணவரும் தெலுங்கு சினிமா உலகில் தயாரிப்பாளர். இவர்களுடைய திருமணம் காதல் திருமணம் தான். ஆனால், வீட்டில் எதிர்ப்பு இல்லாத காதல் திருமணமாக அமைந்தது. இவர்களுக்கு ஒரு பெண்ணும் உள்ளது. அந்தப் பெண் காலேஜ் முடித்து விட்டார்.

-விளம்பரம்-

அப்போ இவ்வளவு பெரிய பொண்ணுக்கு அம்மாவா? நடிகை ராணி என்று நம்ப முடியாத அளவிற்கு உள்ளார். குழந்தை பிறந்தவுடன் சினிமாவிற்கு இடைவெளி விட்டு இருந்தார். அதற்குப் பிறகு தான் விக்ரம் நடிப்பில் ஜெமினி படத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் ஜெமினி படத்தில் ‘ஓ போடு பாட்டு’ வேற லெவல்ல ஹிட்டாச்சி. இதனைத் தொடர்ந்து தெலுங்கு படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனா,தமிழ் சினிமாவில் நடிக்க மீண்டும் வரவில்லை. இப்போ முழு நேரமும் ஹவுஸ் வைஃப் ஆக தான் இருக்கிறார். அப்பப்ப சில தெலுங்கு படங்களில் மட்டும் போய் நடிச்சிட்டு வர்றார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news