இரட்டை குழந்தைகளுக்காக முதல்முறையாக வழக்கத்தை மாற்றிய நயன்தாரா ? என்ன தெரியுமா ?

0
261
nayan
- Advertisement -

குழந்தைகளுக்காக தன்னுடைய வழக்கத்தை முதன் முறையாக நயன்தாரா மாற்றிக் கொண்டு இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த படம் O2. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

- Advertisement -

நயன்தாரா நடிக்கும் படங்கள்:

இந்த படத்தை தொடர்ந்து நயன் அவர்கள் கனெக்ட், ஜவான், கோல்ட், காட்ஃபாதர், இறைவன் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. சமீபத்தில் தான் இவர்கள் இருவரும் ஹனிமூனுக்காக வெளிநாடு சென்று இருந்தார்கள்.

nayanthaar

நயன்-விக்கி இரட்டை குழந்தை:

அதன் பின் இருவரும் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்கள். இதுபற்றி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருமே தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்து இருந்தார்கள். இதற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள். ஆனால், பலர் கல்யாணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் எப்படி நயன்தாரா குழந்தை பெற்றார்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

-விளம்பரம்-

வாடகை தாய் குழந்தை சர்ச்சை:

இது குறித்து கடந்த மாதம் முழுவதும் சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்திருந்தது. அதற்குப் பிறகு நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் உரிய ஆதாரங்களை மருத்துவரிடம் சமர்ப்பித்து இருந்தார்கள். இந்த நிலையில் தங்களுடைய குழந்தைகளுக்காக பழக்கத்தை நயன்தாரா மாற்றி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, வருடம் வருடம் நயன்தாராவின் பிறந்தநாளை விக்னேஷ் சிவன் வெளிநாட்டில் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அது குறித்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வைரலாவது அனைவரும் அறிந்த ஒன்று.

nayan

நயன்தாரா பிறந்தநாள்:

இந்த நிலையில் நயன்தாராவின் 38 வது பிறந்தநாள் வருகிற நவம்பர் 28ஆம் தேதி வர இருக்கிறது.
ஆகையால், இந்த ஆண்டும் நயன்தாரா வெளிநாடு சென்று பிறந்த நாளை கொண்டாடுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், நயன்தாரா இந்த ஆண்டு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வெளிநாடு செல்ல வில்லையாம். மேலும், திருமணத்திற்கு பின் மற்றும் குழந்தை பெற்ற பின் வரும் முதல் பிறந்தநாள் என்பதால் இந்த பிறந்த நாளை நயன்தாரா தன்னுடைய குழந்தைகளுடன் வீட்டிலேயே கொண்டாட முடிவு செய்திருக்கிறார். அதோடு, இவருடைய பிறந்தநாள் அன்று நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement