பாகுபலி நடிகையிடம் போலீசார் 7 மணி நேரம் விசாரணை – பரிசு பொருட்களால் வந்த வினை.

0
620
bahubali
- Advertisement -

பாகுபலி நடிகையிடம் போலீஸ் பல மணி நேரம் விசாரணை நடத்தி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராஜமவுலி. இவர் தெலுங்கு மொழியில் தான் புகழ்பெற்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். இவன் முதன் முதலாக ஸ்டூடன்ட் நம்பர் 1 என்ற படத்தை தான் இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

இருந்தாலும், இவரை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது பாகுபலி படம் தான். இந்திய சினிமாவில் எத்தனையோ பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தது பாகுபலி திரைப்படம் தான். கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

- Advertisement -

பாகுபலி படம்:

இந்த படத்தில் பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், நாஸர், சுதீப், தம்மனா, அனுஸ்கா, சத்யராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தனர். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படமும் மாபெரும் வெற்றியை பெற்று வசூல் சாதனையை படைந்தது. மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாமே ரசிகர்கள் அதில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஐட்டம் டான்சர் :

அதிலும், இந்த படத்தில் மனோகரி என்ற பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த பாடலில் நடிகர் பிரபாஸுடன் மூன்று நடிகைகள் நடனமாடி இருப்பார்கள். அதில் ஒருவர் தான் நடிகை நோரா ஃபதேஹி. இவர் பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் ரோர், டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பன்ஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தெலுங்கு, ஹிந்தி என பழமொழிகளிலும் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடிடுகிறார்

-விளம்பரம்-

200 கோடி ரூபாய் மோசடி

பின் இவர் 2015 ஆம் ஆண்டில் ஹிந்தி பிக் பாஸ் 9 இல் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் நடன நிகழ்ச்சியான ஜலக் திக்லா ஜாவில் பங்கேற்று இருந்தார். இந்த நிலையில் நடிகை நோரா ஃபதேஹிவிடம் போலீஸார் விசாரணை நடத்தி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்துகிறது. அதாவது, 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் நோரா ஃபதேஹி சிக்கிருக்கிறார்.

7 மணி நேரம் விசாரணை

இந்த மோசடி வழக்கில் நோரா ஃபதேஹிவுக்கும் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் அந்த மோசடி கும்பலில் இடம் பெற்றவர்கள் நோரா ஃபதேஹிவுக்கு பரிசு பொருட்களை கொடுத்திருக்கிறார்கள். டெல்லி போலீசில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் நோரா ஃபதேஹிவிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தி இருக்கின்றன. தற்போது இந்த தகவல் இந்தி திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement