-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

15 வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் தனது தந்தையின் பிறந்தநாளில் நயன்தாரா போட்ட உருக்கமான பதிவு.

0
484

தன் தந்தையின் பிறந்தநாளில் நயன்தாரா பதிவிட்டு இருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகையாகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் நயன்தாரா கலக்கி கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

-விளம்பரம்-

அந்த வகையில் கடந்த ஆண்டு நடிகை நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியாகி இருந்த ஜவான் படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இதை அடுத்து சமீபத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருந்த படம் அன்னபூரணி. இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட ரெடின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இதை அடுத்து தற்போது நயன்தாரா அவர்கள் கோலிவுட், பாலிவுட் என பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

நயன்தாரா திரைப்பயணம்:

மேலும், நயன் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தொழிலதிபராகவும் கலக்கி கொண்டு வருகிறார். இப்படி இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். அதிலும் பிரபுதேவா, சிம்புவின் காதல் விவகாரத்தில் நயன்தாரா பெயர் ரொம்பவே கெட்டுப் போனது. இருந்தாலும், மனம் தளராமல் நயன்தாரா தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தி வந்திருந்தார். பின் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் உள்ள ஹோட்டலில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.

நயன்தாரா குடும்பம்:

-விளம்பரம்-

இந்த திருமணத்தில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். திருமணமான நான்கே மாதத்தில் வாடகை தாய் மூலம் இவர்கள் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகும் நயன்- விக்னேஷ் சிவன் இருவரும் தங்களின் கேரியரில் விக்னேஷ் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை நயன்தாரா அவர்கள் தன்னுடைய தந்தையின் பிறந்தநாளுக்கு பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

நயன்தாரா பதிவு:

அதில் அவர், தன்னுடைய சிறுவயதில் தன் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் ஹீரோ. என்றென்றும் என் அன்பு. ஐ லவ் யூ அச்சா என்று பதிவிட்டு இருக்கிறார். இவரை அடுத்து நயன்தாராவின் கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவனும் தன்னுடைய மாமனாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டிருக்கிறார். தற்போது இவர்களின் பதிவு தான் வைரலாகி வருகிறது. மேலும், 2021 ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியில் நயன், என் குடும்பத்தை பற்றி நான் பெரிதாக பேசுவது கிடையாது. அவர்கள் ஒரு தனி உலகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.

தன் தந்தை குறித்து சொன்னது:

என் அப்பா பற்றி கூட நான் பெரிதாக பேசியது இல்லை. அவர் ஒரு ஏர் போர்ஸ் ஆபிஸர். என் தந்தைக்கு 12, 13 வருடங்களாகவே உடல்நிலை சரியில்லை. நான் தற்போது இப்படி இருக்கிறேன் என்றால் அது அனைத்தும் என் தந்தையிடம் இருந்து வந்தது தான். அவர் தற்போது மருத்துவமனையில் இருக்கிறார். என் அப்பாவின் விஷயத்தில் மட்டும் அவர் முன்பு எப்படி இருந்தாரோ அப்படி என்னால் மாற்றி அமைக்க முடியவில்லை. அது மட்டும் என்னால் மாற்றி அமைக்க முடியும் என்றால் நன்றாக இருக்கும் என்று கண்ணீர் மல்க கூறி இருந்தார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news