படக்குழு அழைத்தும் விஸ்வாசம் படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க மறுத்த நயன்.! என்ன காரணம்.!

0
1249
- Advertisement -

சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் வரும் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. பாடல்கள், டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ரசிகர்கள் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள விஸ்வாசம் திரைப்படம் குடும்பத்தினருடன் கண்டுகளிக்கக் கூடிய வகையில் தணிக்கை குழு யூ சான்றிதழ் அளித்துள்ளது.

-விளம்பரம்-

படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் படத்துக்கான முன்பதிவு பல திரையரங்குகளில் தொடங்கியது. தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெடுக்கள் வேகமாக சில செய்யப்பட்டன. இன்னும் சில திரையரங்குகள் காட்சிகளை அதிகப்படுத்தி முன்பதிவை தொடங்கியுள்ளன.

இதையும் பாருங்க : விஸ்வாசம் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த ஷாலினி.! வைரலாகும் புகைப்படம்.! 

- Advertisement -

இந்நிலையில் இந்த படத்தின் சிறப்பு காட்சியை அஜித் பார்த்துவிட்டு இயக்குனர் சிவாவிடம், நாம் ஒன்றாக பணிபுரிந்த படங்களிலேயே இது தான் பெஸ்ட் என்று கூறியுள்ளார். அதே போல விஸ்வாசம் திரைப்படத்தின் சிறப்புக்காட்சியை நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினி நுங்கம்பாக்கத்தில் உள்ள சிறப்பு திரையரங்கில் நேற்று பார்த்துள்ளார்

ஆனால், இந்த படத்தின் கதாநாயகியான நயன்தாரா மட்டும் இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லையாம். இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக நயன்தாராவை அழைத்துள்ளனர். ஆனால், நயன்தாரா வரவில்லையாம் இதனால் படகுழு சற்று அப்சட் ஆகியுள்ளது. இதுபற்றி நயன்தாராவின் நெருங்கிய தரப்பிடம் கேட்டகபட்ட போது
 படத்தை முன்கூட்டியே பார்ப்பதை விட மக்களுடன் மக்களாக சேர்ந்து பார்க்க தான் நான் ஆசைபடுகிறேன் என்று நயன்தாரா கூறியதாக தெரிவித்துள்ளனர்.

-விளம்பரம்-

Advertisement