என்னது நயன்தாரா அரசியலில் குதிக்க போகிறாரா. இந்த பேச்சுக்கு காரணமே இந்த சந்திப்பு தான்.

0
1517
nayanthara
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அதோடு இன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னியாகவும் திகழ்ந்து வருகிறார். மேலும், நடிகை நயன்தாரா அவர்கள் சினிமாவில் மற்ற நடிகைகளுக்கும் முன் உதாரணமாக இருக்கிறார் என்று கூட சொல்லலாம். நயன்தாரா அவர்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் படங்களில் மட்டும் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. சமீப காலமாகவே நயன்தாரா அவர்கள் நடிப்பில் வரும் எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் அளவு ஹிட் கொடுத்து வருகிறது. இதனால் தற்போது சினிமா உலகில் நயன்தாராவின் கால்ஷீட் கிடைப்பது கொஞ்சம் கஷ்டமாகத் தான் உள்ளதுஎன்று கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-
Image result for நயன்தாரா

- Advertisement -

சமீபத்தில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளி வந்த பிகில் படத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் “தர்பார்”. இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்ற தகவல் வந்து உள்ளது. மேலும், மூக்குத்தி அம்மன் படத்திற்காக நயன்தாரா அவர்கள் விரதம் இருந்து உள்ளாராம்.

இதையும் பாருங்க : பேபி அனிகா வரிசையில் அட்ராசிட்டியை துவங்கிய பாபநாசம் எஸ்தர். புகைப்படத்தை பாருங்க.

மூக்குத்தி அம்மன் படத்திற்காக நயன்தாரா அவர்கள் கன்னியாகுமரி சென்று உள்ளார். பின் பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து உள்ளார். இதனைத் தொடர்ந்து இவர் தன் காதலன் விக்னேஷ் சிவன் உடன் சேர்ந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று அங்கும் சுவாமி தரிசனம் செய்தார். அந்த கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பாஜகவின் மூத்த தலைவர் நரசிம்மன் தன் குடும்பத்துடன் வந்து இருந்தார். அப்போது தலைவர் நரசிம்மன் அவர்கள் நடிகை நயன்தாராவிடம் தன்னையும், தன் குடும்பத்தையும் பற்றி சொல்லி அறிமுகம் செய்து கொண்டார். பின் நயன்தாராவை கட்சியில் இணைந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Image result for நயன்தாரா

அதுமட்டுமில்லாமல் எங்கள் கட்சியில் இணைந்தால் நீங்கள் மக்களுக்கு செய்ய வேண்டிய நல்ல சேவைகளை எல்லாம் செய்யலாம். இந்தியாவிற்கு நல்ல அரசியலும் கிடைக்கும். அதோடு அரசியல் மூலம் நல்ல எதிர்காலம் உங்களுக்கு இருக்கிறது என்றும் அவர் கூறி உள்ளார். இதற்காக நடிகை நயன்தாரா அவர்கள் என்ன பதில் கூறி இருப்பார் என்ற தகவல் இன்னும் வரை வெளியாகவில்லை. ஆனால், இவர்களுடைய பேச்சு வார்த்தை சுமார் 25 நிமிடங்களுக்கு மேல் இருந்ததாக தகவல் வந்து உள்ளது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் நயன்தாரா அரசியலில் இறங்கி விடுவாரா?? என்று பல கேள்விகளை சமூக வலைத்தளங்களில் எழுப்பி வருகின்றனர். ஆர். ஜே. பாலாஜி தான் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்குகிறார்.

மேலும், இது தான் இவர் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படம். இந்த படம் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுதவிர விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் தற்போது நெற்றிக்கண் என்ற படத்திலும் நயன்தாரா அவர்கள் நடித்து வருகிறார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்று தெரிய வந்து உள்ளது.

Advertisement