187 நாடுகள்,2500 வீரர்கள் பங்குபெறும் விளையாட்டு போட்டியிலும் காசு பார்க்க துடிக்கும் நயன். இருக்கற பிஸ்னஸ் போதாதா ?

0
764
nayanthara
- Advertisement -

செஸ் ஒலிம்பியாட் விழாவை நடத்த நயன்தாராவுக்கு விருப்பமிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் நயன்தாரா. சமீபகாலமாகவே இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதனால் இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகின்றது.

-விளம்பரம்-
nayanthara

இதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சினிமாவின் உச்ச நடிகையாக நயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார். விக்னேஷ் சிவன் உடன் இணைந்து நயன்தாரா படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் இருவரும் பல ஆண்டு காலமாக தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக வலம் வந்துக் கொண்டிருந்தவர்கள். இடையில் இவர்கள் யாருக்கும் தெரியாமல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : யுவன் சார் எனக்கு பாட வாய்ப்பு தரனே சொல்லி இருக்கார் – ஆனந்த கண்ணீரில் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரபலம்.

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திரைப்பயணம்:

மேலும், இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகிலும், வெளி உலகிலும் வலம் வந்து கொண்டிருந்தாலும் படங்களில் பிசியாக பணி புரிந்து வருகிறார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன், அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை இயக்குகிறார். சமீபத்தில் தான் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதேபோல் நயன் நடித்த O2 படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் :

இதனை தொடர்ந்து நயன் அவர்கள் காட்பாதர், கனெக்ட், ஜவான், திரில்லர் படம் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. மேலும், திருமணம் முடிந்தவுடன் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் கோயில்களுக்கு சென்று இருந்தார்கள். பின் தாய்லாந்திற்கு ஹனி மூன் சென்றிருந்தார்கள். அங்கு எடுத்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி :

தற்போது இருவருமே தங்களுடைய பட வேலையில் பிசியாக இருக்கிறார்கள். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் விழாவை நடத்த நயன்தாராவுக்கு விருப்பமிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சியை நடத்த நயன்தாராவின் நிறுவனம் விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நயன்தாரா பிசினஸ் வுமன் அவதாரம்:

அது மட்டுமில்லாமல் நயன்தாரா உட்பட ஐந்து நிறுவனங்கள் இந்த போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சியை நடத்த விண்ணப்பித்துள்ளது. டெண்டரின் இறுதியில் அந்த ஐந்து நிறுவனங்களில் ஒன்று தான் செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் ஏற்கனவே நயன்தாரா பிசினஸ் வுமனாக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் அழகு சாதனப் பொருள் தயாரிப்பில் கால் தடம் பதித்திருக்கிறார். தீ லிப் பாம் கம்பெனி என்று தன்னுடைய நிறுவனத்திற்கு பெயர் வைத்திருக்கிறார். இந்த நிறுவனத்தை நடிகை நயன்தாரா, சரும மருத்துவர் ரெனிட்டா ராஜன் என்பவருடன் இணைந்து நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement