நீண்ட மாதமாக வலிமை அப்டேட் வராததால் அஜித் ரசிகர்கள் யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர். அஜித் ரசிகர்கள் பலரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி பிரச்சாரத்திற்கு சென்ற போது வலிமை அப்டேட் எப்போது வரும் என்று கேட்டு இருந்தனர். அதே போல கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது பீல்டிங் செய்து கொண்டு இருந்த இங்கிலாந்து வீரர் மொயின் அலியை அழைத்து அவரிடம் வலிமை அப்டேட்டை கேட்டு இருந்தனர் அஜித் ரசிகர்கள்.
அவ்வளவு ஏன் பல்வேறு திட்டங்களை துவங்கி வைப்பதற்காக கடந்த பிப்ரவரி 14 தமிழ் நாட்டிற்கு வந்த பிரதமர் மோடியிடமே அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டை கேட்டனர். அந்த வீடியோவும் வைரலானது.இப்படி ஒரு நிலையில் வரமுறை இல்லாமல் தேவையில்லாத இடத்தில் எல்லாம் அப்டேட் கேட்கும் ரசிகர்களால் கடுப்பான அஜித் தனது ரசிகர்களின் செய்யல்பாட்டால் வருந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தக்க நேரத்தில் வலிமை அப்டேட் வரும் என்று கூறினார் அஜித்.
சரி, மே 1 ஆம் தேதி அஜித் பிறந்தநாளில் படத்தின் பர்ஸ்ட் லுக்காவது வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பர்ஸ்ட் லுக்கும் கிடையாது என்று கையை விரித்தனர் வலிமை படக்குழு. இப்படி ஏற்கனவே வலிமை அப்டே வராமல் அஜித் ரசிகர்கள் கடுப்பில் இருக்க, வெந்த புண்ணில் வேலை பாச்சிய கதையாக வலிமை படத்தை பற்றி கேலி செய்யும் வகையில் சிவாங்கி பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில் விஜய் நடத்த கடைசி படம் குறித்து கேட்டதற்கு மாஸ்டர் என்று சரியாக சொன்ன சிவாங்கி, தல படம் எண்டு கேட்டதற்கு விவேகம், வேதாளம் என்று கூறினார். அதே போல அவரின் படம் வரப்போதே ‘அடிக்கடி அப்டேட் கேப்பங்கேளே’ என்று சொல்லி சிரித்தார். இந்த வவீடியோ தான் தற்போது அஜித் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், ஷிவாங்கியோடு சேர்த்து அஸ்வின் மற்றும் சக்தியையும் திட்டி தீர்த்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் ஷிவாங்கி. அப்போது அங்கு இருந்த ரசிகர்கள் சிலர் அவரிடமும் வலிமை அப்டேட்டை கேட்டனர். அதற்கு ஷிவானி, வலிமை அப்டேட்டா, அது பத்தி எனக்கே தெரியாதே என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.