லண்டனில் தந்தைக்கு தெரியாமல் ரிஜெஸ்டர் மேரேஜ், சிம்ப்ளிளாக நடந்த இரண்டாம் மேரேஜ். யுவனின் முதல் இரண்டு மனைவி யார் தெரியுமா ? ?

0
1310
yuvan
- Advertisement -

தமிழ் சினிமாவில் இசை ஞானி இளையராஜாவின் மகன் தனது தந்தைக்கு நிகராக ஒரு இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். தனக்கென ஒரு பாணியில் கிட்டத்தட்ட தன் தந்தையை ஒத்தது போல இசையமைக்கும் யுவனுக்கும் ஏன் இன்னும் தேசிய விருது கிடைக்கவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றாகும். அரவிந்தன் துவங்கி தற்போது வரை யுவன் எண்ணெற்ற இசை ஆல்பங்களை கொடுத்திருக்கிறார். இப்படி இசையில் சிறப்பாக அமைந்த அவரின் சொந்த வாழ்க்கை சரியாக அமையவில்லை. ஆம், யுவனின் திருமண வாழ்க்கை இரண்டு முறை தோல்வியில் தான் முடிந்தது.

-விளம்பரம்-

யுவன் ஷங்கர் ராஜாவிற்கு தற்போது திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. ஆனால், யுவன் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பது பலர் அறிந்திராத உண்மை. யுவன் சங்கர் ராஜா கடந்த 2003 ஆம் ஆண்டு தனது காதலியான சுஜயா என்பவரை ரிஜிர்ஸ்டர் திருமணம் செய்துகொண்டார். இவரை 2002 ஆம் ஆண்டு லண்டலின் ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்ற போது சந்தித்து அவர் மீது காதல் கொண்டார்.

- Advertisement -

இதையும் பாருங்க : தளபதி 67 LCU-வில் இணையுமா? இயக்குநர் லோகேஷ் சொன்ன செம பதில். இதோ வீடியோ.

யுவனின் முதல் திருமணம் :

பின்னர் 2005 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்தார். பின்னர் அவரை 2007 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். முதல் திருமணம் சரி வர அமையாததால் விவாகரத்துக்கு பின்னர் 4 ஆண்டுகள் சிங்கிளாக வாழ்ந்து வந்தார் யுவன். அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஷில்பா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் படு கோலாகாலமாக நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு பின்னரும் பல பிரபலங்கள் வந்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இரண்டாம் மனைவி ஷில்பா :

ஆனால், இந்த திருமண வாழ்க்கையும் யுவனுக்கு சரிவர அமையமில்லை. யுவன் அவரையும் விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜப்ருன் நிஷா என்பவரை மூன்றாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு ஒரு மகளும் பிறந்தார். மூன்றாம் திருமணத்திற்கு முன்பாகவே யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தை ஏற்று தனது பெயரை அப்துல் காலிக் என்று பெயரை மாற்றிக்கொண்டார்.

இஸ்லாம் பெண்ணை திருமணம் செய்ய மதம் மாறினாரா :

பலரும் யுவன் இஸ்லாம் பெண்ணை காதலித்தால் தான் யுவன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார் என்று கூறினர். ஆனால், மூன்றாம் திருமணம் முன்பே இஸ்லாம் மதத்தை பின் பற்றி வந்தார் யுவன். இதுகுறித்து ஒரு பேட்டியில் தெரிவித்த அவர் ‘ இசை என்றால் என்னவென்றே தெரியாத எனக்கு ஒரு சக்தியாக இருந்தது என் அம்மா தான். அவர்கள் இறந்த பின்னர் எனக்கு ஒரு உந்து சக்தியாக இருந்தது குரான் தான். என்னுடைய தேடலுக்கும் நான் நம்பிக்கை இழந்து இருந்த போது என் நம்பிக்கைக்கும் எனக்கு அதில் பதில் கிடைத்தது.

குடிப்பழகத்தில் இருந்த யுவன் :

மேலும், இன்னும் ஆழமாக சொல்லப்போனால் நான் என் வாழ்க்கையில் குடித்ததே இல்லை. ஆனால், இடையில் ஒரு மூன்று மாதம் குடி மற்றும் புகை பிடிக்க ஆரம்பித்துவிட்டேன்.ஆனால், எனக்கு தெரியும் இது நான் இல்லை என்று எனக்கு தோணும். பின் எனக்குள் ஒரு எண்ணம் வந்தது. இது இப்படியே போனால் நாம் சம்பாதித்த அணைத்து பெயரும் புகழும் நான் இழந்து விடுவேன் என்று எண்ண ஆரம்பித்துவிட்டேன் என்று கூறியிருந்தார்.

Advertisement