ஜிகு ஜிகு குட்டை ஆடை, புத்தாண்டை காதலனுடன் கிளாமராக கொண்டாடிய நயன்.

0
1014
nayanthara-vignesh

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். மேலும் ,நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனை விட்டு செல்வதே இல்லை.

இத்தனை பிசியிலும் நடிகை நயன்தாரா தனது காதலருடன் ஊர் சுற்றுவதை மட்டும் தவறுவதே இல்லை. அடிக்கடி வெளிநாட்டிற்கு பறந்து செல்லும் இந்த ஜோடிகள் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு தங்களது காதலை ரசிகர்களுக்கு அப்டேட் செய்து விடுகின்றனர். சமீபத்தில் சென்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டம், நியூ இயர் கொண்டாட்டம், நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று அனைத்தையும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டில் கொண்டாடினார்.

இதையும் பாருங்க : ஆரியை பற்றி ஆஜீத்திடன் ஒரு பேச்சு, ஷிவானியிடம் ஒரு பேச்சு – இப்படி ஒரு பொறாமை இருக்க கூடாது பாலா.

- Advertisement -

சமீபத்தில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதலில் விரிசல் ஏற்பட்டதாகவும் இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றும் பல்வேறு புதிய வதந்திகள் கிளம்பியது. அனால், தற்போதும் இவர்கள் ஒன்றாக தான் இருந்து வருகின்றனர். சமீபத்தில் கூட நடிகை நயன்தாரா அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஹைட்ரபாத் சென்று இருந்தார். அங்கே சிலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்புகள் ரத்தாகியது. இதனால் மீண்டும் சென்னை திரும்பினார் நயன்தாரா.

சென்னை திரும்பிய நயன், தற்போது படப்பிடிப்பு இல்லாததால் காதலருடன் ஜாலியாக நேரத்தை ஒதுக்கி வருகிறார். சமீபத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடினார் நயன்தாரா. இப்படி ஒரு நிலையில் நடிகை நயன்தாரா தனது காதலனுடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தில் ஜிகு ஜிகு குட்டையான உடையில் கொஞ்சம் கிளாமராக இருக்கிறார் நயன்.

-விளம்பரம்-

Advertisement