விஜய் அரசியலுக்கு வந்தா நான் ஓடி போய் பதுங்கணுமா?- மன்சூர் அலிகான் ஆவேச பேட்டி

0
218
- Advertisement -

விஜய் அரசியல் குறித்து மன்சூர் அலிகான் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக மட்டும் இல்லாமல் சமீப காலமாகவே காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிட்டு தேர்தலில் தோற்றது அனைவருக்கும் தெரிந்ததே. பின் இவர் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு மன்சூர் அலிகான் நடிப்பில் வெளியாகி இருந்த படம் கிக். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

- Advertisement -

மன்சூர் அலிகான் திரைப்பயணம்:

இதனை அடுத்து சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த லியோ படத்தில் மன்சூர் அலிகான் நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று மட்டும் இல்லாமல் நல்ல வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. தற்போது மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சரக்கு.

மன்சூர் அலிகான் அரசியல்:

இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஜெயக்குமார் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஒரு பக்தி பாடலை எழுதி இசை அமைத்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, மன்சூர் அலிகான் அவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறி தமிழ் தேசிய புலிகள் என்ற புதிய கட்சியை துவங்கி இருக்கிறார். இதை அடுத்து இந்த கட்சியின் சார்பில் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

-விளம்பரம்-

மன்சூர் அலிகான் பேட்டி:

இந்த நிலையில் தமிழ் தேசிய புலிகள் என்ற தன்னுடைய கட்சியின் பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என்று மாற்றம் செய்திருக்கிறார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்தித்து பேட்டி அளித்து இருக்கிறார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் விஜய் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு மன்சூர் அலிகான், அதற்காக நான் என்ன ஓடிப் போய் பதுங்கிக் கொள்ளணுமா? அது நாளை. இப்போது விஜய் கோட் என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

விஜய் அரசியல் குறித்து சொன்னது:

நாளைக்கு அவர் கட்சி தொடங்குகிறார், இவர் கட்சி தொடங்குகிறார். அதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு பயமில்லை. எங்களுடைய கட்சியினுடைய கொள்கைகள் தான் முக்கியம். நாங்கள், மீனவர்களுக்கு நடக்கும் அநீதி நிற்க வேண்டும். அவர்களுக்கான சுதந்திரம், அவர்களுக்கான உரிமை கிடைக்க வேண்டும். நீட் தேர்வு தூக்க வேண்டும். தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். இப்படி எங்களுடைய கட்சியின் கொள்கை விஷயத்தில் தான் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். நான் 40 ஆண்டு காலமாக அரசியலில் இருக்கிறேன். சில கட்சிகளில் இருந்தேன். அதை விட்டு வந்து நான் தனியாக ஒரு கட்சியை தொடங்கி இருக்கிறேன். இனி நடைபெற இருக்கும் தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement