விஜய் 63 படப்பிடிப்பில் கலந்து கொண்ட நயன்தாரா.! சற்றுமுன் வெளியான வீடியோ.!

0
692
Nayanthara
- Advertisement -

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக படத்தில் கமிட் ஆகியுள்ளார். அதில் மிகவும் முக்கியமான படம் தற்போது விஜய் நடித்து வரும் ‘விஜய் 63’ படம் தான். அட்லீ இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா.

-விளம்பரம்-

நடிகை நயன்தாரா விஜயுடன் ஏற்கனவே ‘சிவகாசி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். மேலும், வில்லு படத்தில் ஜோடியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்க்கது. தற்போது விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை நயன்தாரா விஜய் 63 படப்பிடிப்பில் விரைவில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று நடிகை நயன்தாரா இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் . இன்று (மார்ச் 17)அவருக்கான காட்சிகள் படமாக்கபட்டதாக கூறப்படுகிறது.

Advertisement