காருக்குள் ஏற முடியாமல் சிக்கித் தவித்த நயன் – முன்னாள் காதலர் பெயரை கோஷம் போட்ட ரசிகர் (இன்னுமாடா அத சொல்வீங்க)

0
11484
nayanthara
- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்த விஷயமே அதேபோல நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு முன்னதாக சிம்புவையும் பிரபுதேவாவை காதலித்து வந்தார் ஆனால் அவர்கள் இருவருடனும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த இரண்டு காரணமே தோல்வி அடைந்தது என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான். ஆனால் சிம்பு மற்றும் பிரபுதேவாவை நயன்தாரா விக்னேஷ் சிவனின் காதல் ஜோடிகள் தான் தற்போதும் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

தற்போது நயந்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வரும் இந்த படத்தின் சமந்தாவும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகிய மூவரின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இதையும் பாருங்க : தோழிகளுடன் பிகினி உடையில் அனேகன் பட நடிகை – இப்படி ஒரு பிகினிய பாத்து இருக்கீங்களா.

- Advertisement -

இதனால் இவர்களை காண ஷூடிங் ஸ்பாட்டிற்க்கு பல ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இன்றைய படப்பிடிப்புக்கு நயன்தாரா செல்லும் போது திடீரென ரசிகர்கள் கூட்டம் அவர் தங்கியிருந்த ஓட்டல் முன் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நயன்தாராவின் பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக காரில் அனுப்பி வைத்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. அந்த வீடியோவில் ஒருவர் Str என்று நயந்தாராவின் முன்னாள் காதலர் பெயரை கோசமிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நடிகை நயன்தாரா விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்து இருக்கும் மோதிரம் பற்றி கேட்கப்பட்ட போது தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும், மிகவும் சிம்பிளாக நடைபெற்றதால் வெளியில் சொல்லவில்லை என்றும் திருமணத்தை அனைவரிடமும் சொல்லிவிட்டு தான் செய்வோம் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement