விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் கார்த்தி மற்றும் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா ஜோடிகள் நிஜ வாழ்விலும் காதலித்து வந்து பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள்.
ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் சஞ்சீவிற்கு பதில் ‘திருமணம்’ சீரியல் நடிகர் சித்து நடித்து வருகிறார். மேலும், இந்த சீரியலில் சித்துவின் அம்மாவாகவும் ஆல்யாவின் மாமியாராகவும் நடித்து வருகிறார் நடிகை பிரவீனா. பிரவீணா நாயர் இவர் கேரளாவின் செங்கணசேரியில் பிறந்தார். இவருடைய அப்பா ராம்சந்திரன் நாயர் ஒரு கல்லூரி பேராசிரியர். பிரவீணா தனது 18 வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். 50க்கும் மேற்ப்பட்ட மலையாள படங்களில் நடித்தார் பிரவீணா.
இதையும் பாருங்க : காருக்குள் ஏற முடியாமல் சிக்கித் தவித்த நயன் – முன்னாள் காதலர் பெயரை கோஷம் போட்ட ரசிகர் (இன்னுமாடா அத சொல்வீங்க)
மேலும், நடிகை பிரவீனா, சன் டிவியில் பல காலம் ஒளிபரப்பான பிரியமானவளே சீரியலில் நடித்தன் மூலம் தமிழ் ரசுகர்களிடையே பிரபலம் அடைந்தார்.தமிழ் சினிமாவில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் சீரியல்களில் நடித்து அசத்தி உள்ளார். மலையாளத்தில் செம்ம ஹிட் ஆன 100 டேஸ் ஆப் லவ் படத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.மேலும், இவர் தமிழில் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோமாளி உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்து இருக்கிறார்.
அது மட்டும்மல்லாமல் இவர் ஸ்ரீவித்யா தங்கையும் கூட. தமிழ் சினிமாவில் 60 காலகட்டங்களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீவித்யா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் நடித்த இவர் தமிழில் எம் ஜி ஆர் காலகட்டம் துவங்கி விஜய் அஜித் வரை நடித்து விட்டார். இந்நிலையில், இவர் இளம் வயதில் பருவ மொட்டாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.