பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு மட்டும் வரல.! இந்த படத்துக்கு மட்டும் போறாரா நயன்.!

0
5914
nayan
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் இன்றைய இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்கிறார். மேலும், தென்னிந்திய திரை உலகிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் என்று சொல்லப்பட்டு வருகின்றன. சில வருடங்களாகவே நயன்தாரா நடிப்பில் திரைக்கு வெளிவந்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட்டாக இருந்தது. அதை தொடர்ந்து தளபதி விஜய்யின் 63 வது படமான பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.மேலும், பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சிறப்பாக முடிவடைந்தது.பொதுவாகவே நயன்தாரா தான் நடிக்கும் படத்தின் புரமோஷனுக்கும் , எந்த ஒரு விழாவிற்கும் வர மாட்டார் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
Image result for bigil nayanthara

பிரபலமான நடிகர், பிரபலமான இயக்குனர், பெரிய கம்பெனி ஆக கூட இருந்தாலும் புரமோஷனுக்கு வந்து கலந்துகொள்ளவும் மாட்டார்.அவர் எந்த ஒரு பேட்டியும் கூட தருவதில்லை.அதுவும் அபூர்வமாக ‘பூக்கும் காளான்’ போல அவருக்கே தோன்றினால் மட்டும் டிவியில் கலந்து கொண்டு பேட்டி அளிப்பார். நயன்தாராவை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யும்போதே அவர் கண்டிப்புடன் சொல்லிடுவார். என்னை எந்த ஒரு புரமோஷனுக்கு, விழாவிற்கு வற்புறுத்தக்கூடாது என்றும் , இந்த கண்டிஷனுக்கு சரி என்றால் தான் அவர் படத்தில் நடிக்க சம்மதிப்பார் என்று திரையுலகத்தில் பேசப்பட்டு வருகின்றன. இருப்பினும் ,பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நயன்தாரா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. அதை தொடர்ந்து,வரும் ஞாயிறு கிழமை 22ம் தேதி அன்று ஹைதராபாத்தில் “சைரா ” படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.இந்த “சைரா ” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நயன்தாரா கலந்து கொள்வாரா? என பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதையும் பாருங்க : கோல்டன் டிக்கெட்டை வென்று இறுதி போட்டிக்கு நுழைந்த நபர் யார் தெரியுமா.!

- Advertisement -

மேலும் பிரம்மாண்டமான படம், பிரபலமான நடிகர்கள் பலர் நடித்துள்ளனர் என்பதனால் நயன்தாரா கண்டிப்பாக இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், ஆவலுடன் ரசிகர்கள் உள்ளனர். சொன்ன மாதிரி பிகிலுக்கு பாய் சொன்னது போல,சைராவுக்கு டாடா சொல்ல மாட்டார் என ரசிகர்கள் நம்புகிறார்கள். பிரம்மாண்டமான செலவில் சிரஞ்சீவி நடித்துள்ள “சைர நரசிம ரெடி” படம் அக்டோபர் 2ம் தேதி திரைக்கு வரபோகிறது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக கூறினர். இந்த படத்தில் அமிதாப்பச்சன், சுதீப், விஜய்சேதுபதி, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா ஆகிய பல பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளனர்.

Related image

பாகுபலி 1, 2 படத்திற்கு அப்புறம் மக்களை பிரமிக்க வைக்கும் அளவில் இருப்பதாகவும், தமிழ், தெலுங்கு,, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் திரையரங்கிற்கு வரப்போகிறது என்றும் படக்குழுவினர் கூறினர். சில தினங்களுக்கு முன்னால் இந்த படத்தின் டிரைலர் ஐந்து மொழிகளிலும் அதாவது ஒரே சமயத்தில் வெளியிடப்பட்டது. இதனால் ரசிகர்களிடையே அதிக வரவேற்பையும் ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் குறித்து பிரபலமான நடிகர்களும்,ரசிகர்களும் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement