நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் பேசப்பட்டு இருக்கும் ஒரே விஷயம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் தான். இவர்கள் பல ஆண்டு காலமாக தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக வலம் வந்துக் கொண்டிருந்தவர்கள். இடையில் இவர்கள் யாருக்கும் தெரியாமல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். இது குறித்து நயன்தாராவே நிகழ்ச்சி ஒன்றில் சொல்லி இருந்தார்.
மேலும், இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகிலும், வெளி உலகிலும் வலம் வந்து கொண்டிருந்தாலும் இருவரும் படங்களில் பிசியாக பணி புரிந்து வருகிறார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருந்தது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன், அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை இயக்குகிறார்.
நயன்தாரா- விக்னேஷ் சிவன் திரைப்பயணம்:
சமீபத்தில் தான் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதேபோல் நயன் அவர்கள் O2, காட்பாதர், கனெக்ட், ஜவான், திரில்லர் படம் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இருந்தாலும் இவர்களின் திருமணம் எப்போது? என்பது தான் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து இருந்த ஒரு விஷயம். அந்த வகையில் அனைவரும் எதிர்பார்த்த இவர்களுடைய திருமணம் ஜூன் 9ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக இருவரும் திருச்சியில் உள்ள தங்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று இருந்தார்கள்.
நயன்தாரா- விக்னேஷ் சிவன் குலதெய்வம்:
அதோடு நயன்தாரா, விக்னேஷ் சிவன் குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி இருந்தது. மேலும், பலரும் எதிர்பார்த்தது போல இவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெறவில்லை. இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நாளை கோலாகலமாக நடக்க இருக்கிறது. இவர்களின் திருமணத்தில் தென்னிந்திய சினிமா துறையின் மிக பிரபலமான நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். தற்போது இவர்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம்:
முழுக்க முழுக்க பாரம்பரியமான முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களுடைய திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இவர்களுடைய திருமண நிகழ்ச்சிக்கு 200 முக்கிய பிரபலங்களை அழைத்துள்ளனர். இந்த நிலையில் இவர்களின் திருமண விழா நேற்று இரவு மெஹந்தி நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது. அந்த விழாவில் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 100 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் கட்டுப்பாடுகள்:
அதுமட்டும் இல்லாமல் அந்த நிகழ்ச்சியில் பல வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. அதேபோல் வந்தவர்களுக்கு நயன்தாரா- விக்னேஷ் சிவன் புகைப்படம் ஸ்டிக்கர் ஒட்டிய தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இதே போல ஒவ்வொரு நிகழ்வையும் வித்தியாசமாக செய்திருப்பதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்திருந்தனர். அதுமட்டுமில்லாமல் நாளை நடைபெற இருக்கும் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணத்தில் பங்கேற்பவர்கள் புகைப்படம் எடுக்க எடுக்கக் கூடாது, செல்போன் கொண்டு வரக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.