விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில், கோமதி- தங்கமயில் உடன் ஹாஸ்பிடலுக்கு சென்றிருந்த விஷயத்தை சொன்னார். இதனால் சரவணன் கோபப்பட்டார். ஆனால், பாண்டியன் எதுவும் சொல்லவில்லை. அதற்குப்பின் வீட்டிற்கு வந்த சரவணன், எதற்காக ஹாஸ்பிடலுக்கு போனீர்கள்? ஏன் அவளிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? என்றார். கோமதி, வாழ்க்கை என்றால் பிரச்சனை வரத்தான் செய்யும். அதை எல்லாம் கடந்து வருவது தான் வாழ்க்கை. குழந்தை பிறக்கும் வரை தங்கமயிலுக்கு எதுவென்றாலும் நான் இருப்பேன். அவளுக்கு துணையாக இருப்பேன் என்றார். இதனால் சரவணனால் எதுவுமே பேச முடியவில்லை.

அதற்குப்பின் மீனாவை சந்தித்த சரவணன், இனிமேல் தங்க மயிலிடம் நீ பேசாதே. அதேபோல் தங்க மயிலை பற்றி அம்மாவிடமும் எதுவும் சொல்லாதே என்றார். மீனா, அந்த வீட்டில் அவர்கள் கொஞ்ச நாட்கள் இருந்தாலும் என்னுடைய அக்காவாகத்தான் அவர்களை பார்த்தேன். இப்போது அவர்களுக்கு ஒரு கஷ்டம் என்று வந்தால் என்னால் தனித்து விட முடியவில்லை. அவர்களுடன் சேர்ந்து வாழலாமா? இல்லையா? என்று முடிவெடுப்பது உங்களுடைய விருப்பம். ஆனால், நான் தங்கமயில் உடன் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.
அவர்கள் மாசமாக இருப்பதால் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்வேன் என்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி - ராஜி இருவரும் முத்துவேலை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராஜி, நான் என்னுடைய அப்பா வீட்டிற்கு போகட்டுமா? என்று கேட்கிறார். கோமதி, மாமா ஏதாவது சொல்லுவார் என்கிறார். அப்போது வந்த பாண்டியனிடம் கோமதி, அனுமதி கேட்கிறார். பாண்டியனும் எதுவும் சொல்லாமல் ராஜியை அவருடைய அப்பா வீட்டிற்கு செல்ல அனுமதிக்கிறார். ராஜியை பார்த்து முத்துவேல் சந்தோஷப்படுகிறார். அப்போது வந்த சக்திவேல், எதற்காக இங்கு வந்தாய்? என்று ராஜியை கேட்கிறார்.

இன்றைய எபிசோட்:
ராஜி, என் அப்பாவையே கொலை செய்ய நினைத்த கொலைகாரன் இந்த வீட்டில் இருக்கும் போது நான் வரக்கூடாதா? அவன் செய்யும் தவறுக்கு நீங்கள் துணையாக நிற்பதால் தான் அவன் இப்படி இருக்கிறான். ஒரு நாள் அவன் ஜெயிலுக்கு போகத்தான் போகிறான் என்றெல்லாம் பேசுகிறார். இதனால் கோபப்பட்ட குமார், சக்தி இருவரும் அங்கிருந்து சென்று விடுகிறார்கள். அதற்குப்பின் சரவணன், கதிர், செந்தில் மூவருமே பேசிக் கொண்டு வருகிறார்கள். அப்போது சரவணன், மீனாவிடம் பேசியதை சொல்லி வருத்தப்படுகிறார்

சீரியல் ட்ராக்:
செந்தில் அதெல்லாம் அவள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டாள் என்று சமாதனம் செய்கிறார். அப்போது கதிர், உனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் சொல்லு அண்ணா நான் உனக்காக துணையாக இருப்பேன். எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள் என்று சரவணனுக்கு ஆறுதல் சொல்கிறார். இன்னொரு பக்கம் பழனி, சுகன்யா கர்ப்பமாக இருப்பதால் தன்னுடைய குழந்தை இடம் ரொம்ப ஜாலியாகவும் நாட்டு நடப்பை பற்றி எல்லாம் பேசி கொண்டிருக்கிறார். இதை பார்த்து காந்திமதி, முத்துவேல் இருவரும் சந்தோஷப்படுகிறார்கள்.






