மீண்டும் கோயிலுக்குள் செருப்பு அணிந்து கொண்டு நயன்தாரா சென்றிருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகையாகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும், பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராகவும் நயன்தாரா கலக்கி கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.
சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் நயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் அன்னபூரணி. இந்த படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
அன்னபூரணி படம்:
இந்த படம் முழுக்க முழுக்க சமையலை மையமாக வைத்து இயக்குனர் கொடுத்து இருக்கிறார். படத்தில் நடிகை நயன்தாரா பிராமண குடும்ப பெண்ணாக நடித்து இருக்கிறார். நயன்தாரா தன்னுடைய கல்லூரியில் சமையல் கலை நிபுணராக சேர்ந்து கல்வி பயில்கிறார். இவருக்கு இந்தியாவின் தலைசிறந்த சமையல்கலை நிபுணராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். தன்னுடைய குடும்பத்தின் எதிர்ப்பை மீறி தன்னுடைய லட்சியத்தை நயன்தாரா அடைந்தாரா? இல்லையா? இதற்கிடையில் அவர் எதிர்கொண்ட சிக்கல்களை எல்லாம் எப்படி சமாளிக்கிறார்? என்பதே படத்தின் மீதி கதை.
படம் குறித்த தகவல்:
இது நயன்தாராவின் 75வது படமாகும். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படம் netflix தளத்திலும் வெளியாகி இருக்கிறது. இதனை அடுத்து தற்போது நயன்தாரா அவர்கள் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் ஒரு படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட நயன்தாரா வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.
நயன்தாரா செய்த வேலை:
அதாவது, கோவிலில் நடந்த படபிடிப்பின் போது நயன்தாரா செருப்பு அணிந்து கொண்டு வெளியே வந்திருக்கிறார். நயன்தாரா வெளியே வருவதை பார்த்து அங்கிருந்து ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்திருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ தான் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த பலருமே கோயிலில் இருந்து செருப்பு அணிந்து வெளி வருவதா? அங்கு இருக்கிற குருக்கள் என்ன செய்கிறார்? இது இந்து கடவுளை அவமதிக்கும் செயல் என்றெல்லாம் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
திருப்பதி செருப்பு சர்ச்சை:
ஏற்கனவே நயன்தாரா அவர்கள் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து முடித்த உடனே திருப்பதி சென்றிருந்தார். அங்கு கோவிலுக்கு வெளியே காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் ஏழுமலையான் கோவில் முன்புறம் உள்ள பகுதியில் காலணியுடன் சென்று இருவரும் போட்டோ ஷூட் நடத்தி இருந்தார்கள். இது குறித்து சோசியல் மீடியாவில் மிகபெரிய விவாதம் நடந்தது. அதற்கு பிறகு நயன்தாரா- விக்னேஷ் சிவன் தரப்பில் மன்னிப்பும் கேட்கப்பட்டது. மீண்டும் நயன்தாரா கோவிலில் செருப்பு அணிந்து வந்ததற்கு மன்னிப்பு கேட்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.