தென்னிந்திய சினிமா திரை உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ரசிகர்கள் நயன்தாராவை எவர்கிரீன் நடிகை என்று அழைப்பார்கள். இவர் சினிமாத்துறைக்கு முதன் முதலாக 2003ஆம் ஆண்டு ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழி திரைப்படம் மூலம் தான் அறிமுகமானர். தமிழில் 2005ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். சில வருடங்களாகவே நடிகை நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் தான் .
இதையும் பாருங்க : ‘என் நாட்டிற்கு தேவையான நேரம் இது’ – மீண்டும் டாக்டர் சேவைக்கு வந்த நடிகருக்கு குவியும் பாராட்டு.
சமீபத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் தல அஜீத்துடன் இணைந்து நடித்து வெளிவந்த ‘விஸ்வாசம்’ படம் மூலம் மீண்டும் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வருகிறார். அதை தொடர்ந்து தெலுங்கில் சிரஞ்சீவியின் நடிப்பில் வெளிவந்த ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடிகை நயன்தாரா சிறப்பான தோற்றத்தில் நடித்திருந்தார்.
பின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்திலும் இவருடைய நடிப்பு சும்மா கிழி. இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா அவர்களின் அறிய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. நடிகை நயன்தாரா அவர்கள் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பு விளம்பரங்கள், மாடலிங், தொகுப்பாளினியாகவும் இருந்துள்ளார்.
இதையும் பாருங்க : திருமணமான இத்தனை நாட்களிலேயே விவாகரத்து குறித்து யோசித்துவிட்டேன். அப்போதே கூறியுள்ள ரம்யா.
தற்போது நடிகை நயன்தாராவுக்கு மேக்கப் செய்த ஆர்ட்டிஸ்ட் அணிலா ஜோசப் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நயன்தாரா உடைய புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். அது நயன்தாரா அவர்கள் விளம்பரங்களில் நடிக்கும் போது எடுத்த சில புகைப்படங்களை தற்போது அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இது இதுவரை பார்த்திராத புகைப்படம். தற்போது இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தற்போது நயன்தாரா அவர்கள் ஆர்ஜே பாலாஜி உடன் இணைந்து முக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். இதனை தொடர்ந்து நெற்றிக்கண் என்ற படத்திலும் நயன்தாரா அவர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.