முன்னணி சேனல்களில் ஒன்றான ‘விஜய் டிவி’யில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘கலக்கப்போவது யாரு?’. இந்த நிகழ்ச்சியை ரம்யா சுப்ரமண்யன் தொகுத்து வழங்கினார். இது தான் ரம்யா தொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சியாம். இதனைத் தொடர்ந்து ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’, ‘நம்ம வீட்டு கல்யாணம்’, ‘கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ்’ என அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் ரம்யா சுப்ரமண்யன். இந்த மூன்று நிகழ்ச்சிகளுமே ஒளிபரப்பானது ‘விஜய் டிவி’-யில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னத் திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு செல்லும் வாய்ப்பும் ரம்யா சுப்ரமண்யனுக்கு வந்தது. ‘மொழி, மங்காத்தா, மாசு என்கிற மாசிலாமணி’ போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார் ரம்யா. அதன் பிறகு ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் மிக முக்கிய ரோலில் வலம் வந்தார் ரம்யா. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கிய இந்த படத்தில் ஹீரோவாக துல்கர் சல்மான் நடித்திருந்தார். 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி அபர்ஜித் ஜெயராமன் என்பவரை ரம்யா திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் ரம்யா. ‘ஓ காதல் கண்மணி’ படத்துக்கு பிறகு ‘கேம் ஓவர், ஆடை’ போன்ற சில படங்களில் ரம்யா நடித்திருந்தார். இன்று வரை பலரும், ரம்யா நடிக்க சென்று விட்டதால் தான் அவரது திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று விட்டது என்று கூறிய வண்ணமுள்ளனர். விவாகரத்துக்கான காரணம் பற்றி ரம்யா, சில ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்திருக்கிறார்.
பலர் ‘ஓ காதல் கண்மணி’ படம் தான் எனது விவாகரத்துக்கு வழி வகுத்து கொடுத்ததாக கூறி வருகின்றனர். ஆனால், உண்மையான காரணம் அது அல்ல. எங்களது காதல் கல்யாணம் கிடையாது. வீட்டில் பார்த்து பேசி தான் திருமணம் செய்து கொண்டோம். ஆனால், அவருடன் சேர்ந்து வாழ்ந்த ஒரு 10 நாட்களிலையே, எங்களது திருமண வாழ்க்கை தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதை நாங்கள் இருவருமே உணர்ந்தோம். ஆகையால், உடனே நான் எனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டேன்.
இது நடந்தது 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம். அதன் பிறகு அதே ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தான் மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு வந்தது. அதன் ஷூட்டிங் அம்மாத இறுதியில் துவங்கியது. ஆகையால், சினிமாவினால் எங்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அவர் திருமணம் ஆவதற்கு முன்பு லண்டனில் பணிபுரிந்து வந்தார். திருமணத்திற்கு பிறகு தான், நாங்கள் எடுத்த முடிவு சரியானது அல்ல என்று எங்களுக்குள் ஒரே மனதாக முடிவெடுத்து சமாதானமாக தான் பிரிந்தோம். இப்போது சட்டப்படி விவாகரத்தும் கிடைத்து விட்டது என்று ரம்யா தெரிவித்திருக்கிறார். தற்போது, ரம்யா தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.