ஆட்டோக்காரர் முதல் டெலிவரி பாய் வரை சண்டை – நயன்தாரா வீட்டை காலி செய்தது இதனால் தான். பிரபலம் சொன்ன தகவல்

0
182
- Advertisement -

பிரபல முன்னணி நடிகையான நயன்தாரா சமீபத்தில் ஆட்டோக்காரரிடம் சண்டை போட்ட செய்திதான் இணையத்தில் பரவி வருகிறது. தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகை ஆகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் ஒருவராகவும், பல ஆண்டுகாலமாக லேடி சூப்பர் ஸ்டார் ஆக நயன்தாரா கலக்கி கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், சமீபகாலமாக இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியாக நயன் நடித்த படம் ‘அன்னபூரணி’. இது நயன்தாராவின் 75வது படம் ஆகும். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது.இதை அடுத்து இவர் கோலிவுட், பாலிவுட் என பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

- Advertisement -

நயன்தாரா திருமணம்:

இப்படி கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்த நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் சுமார் ஏழு ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் விக்கி-நயன் ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. வாடகைத் தாய் மூலம் அவர்கள் இந்த குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். அந்த குழந்தைகளுக்கு உயிர், உலக் என்று பெயர் வைத்தது நாம் அறிந்ததே.

குழந்தைகளுக்கு நல்ல தாய்:

அதைத் தொடர்ந்து குழந்தை பிறந்த பின்னரும் சினிமாவில் நடித்து வரும் நயன்தாரா, எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் தங்களது குழந்தைகளை கூட்டிக்கொண்டு சீனாவுக்கு சுற்றுலா சென்று இருந்தனர் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி. அங்கு தங்களது இரண்டாவது திருமண நாளை கொண்டாடினர். இந்த நிலையில் தான் நடிகை நயன்தாரா பற்றிய அதிர்ச்சி தகவல் ஒன்றை வலைப்பேச்சு அந்தணன் கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

ஆட்டோ ஓட்டுனருடன் சண்டை:

அந்த தகவலின் படி, நடிகை நயன்தாரா சென்னை எழும்பூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தபோது, அங்கு தன் மகன்களுடன் விளையாடுவதற்காக கீழே அழைத்து வருவாராம். அப்படி ஒரு முறை அழைத்து வரும்போது, ஆட்டோ ஓட்டுனர் சவாரிக்காக அங்கு வந்துள்ளார். அப்போதுதான் குழந்தைகள் விளையாடும் இடத்தில் ஏன் இவ்வளவு ஸ்பீடா வரீங்க என கேட்டு நயன்தாரா சண்டை போட்டார் என கூறியுள்ளார்.

அப்பார்ட்மெண்ட் காலி செய்ததற்கு காரணம்:

மேலும், உணவு டெலிவரி செய்ய வந்த நபரிடம், ஏன் போன் பேசும்போது இப்படி சத்தமா பேசுறீங்க குழந்தைகளுக்கு டிஸ்டர்ப் ஆகிறது என்றும் சண்டை போட்டதாக அந்தணன் கூறி இருக்கிறார். ஆனால், தற்போது நடிகை நயன்தாரா சென்னை போயஸ் கார்டனில் தனியாக பங்களா கட்டி அங்கு குடியேறி விட்டார். அந்தணன் சொல்வதைப் பார்த்தால், அப்பார்ட்மெண்டில் இப்படி அடிக்கடி சண்டை சச்சரவுகள் வந்ததால்தான் நயன் அங்கிருந்து காலி செய்து விட்டார் என்ற கேள்விகளும் வரத் தொடங்கியுள்ளது.

Advertisement