படத்துல நடிக்கவேயில்லன்னு சாதித்த Gvm – அவர் நடித்த காட்சியின் வீடியோவையே வெளியிட்ட படக்குழு (என்ன சிம்ரன் மூமென்ட்)

0
666
gvm
- Advertisement -

சமீபத்தில் வெளியான ‘அன்பு செல்வன்’ படத்தை பற்றி தனக்கு எதுவும் தெரியாது, நான் அந்த இயக்குனரையோ, தயாரிப்பாளரையோ பார்த்து கூட கிடையாது என்று கெளதம் மேனன் கூறிய நிலையில் ‘அன்பு செல்வன்’ படத்தில் அவர் நடித்த காட்சியின் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருப்பது பெரும் குழப்பத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் இயக்குனர் கௌதம் மேனனும் ஒருவர் இவர் இயக்கிய பல்வேறு திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடித்திருக்கிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-24-1024x782.jpg

அதிலும் போலீஸ் ஸ்டோரி என்றால் நிச்சயம் ஹிட் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், சமீபகாலமாக இவர் இயக்கிய எந்த படங்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இயக்குனர் கெளதம் மேனனை விட நடிகர் கெளதம் மேனனை தான் அதிகம் பேருக்கு பிடிக்கும். அதிலும் குறிப்பாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.

இதையும் பாருங்க : எப்படி இருக்கிறது விஷால் – ஆர்யாவின் ‘எனிமி’ முழு விமர்சனம் இதோ.

- Advertisement -

மேலும், இறுதியாக இவர் மோகன் ஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ருத்ர தாண்டவம் ‘ படத்தில் கூட நடித்து இருந்தார். இந்த நிலையில் பிரபல இயக்குனர் ரஞ்சித், கெளதம் மேனனின் அடுத்த படத்தின் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து இருந்தார். வினோத் என்பவர் இயக்கத்தில், seventymmstudio தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ‘அன்புச்செல்வன்’ என்று டைட்டிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கெளதம் மேனன் இயக்கிய ‘காக்க காக்க’ படத்தில் நடித்த சூர்யாவின் கதாபாத்திரத்தின் பெயரான ‘அன்புச் செல்வன்’ என்ற பெயரை தான் இந்த படத்திற்கு வைக்கப்பட்டு இருந்தது. அதே போல இந்த படத்தின் போஸ்டரிலும் கெளதம் மேனன் காக்கி சட்டையில் இருந்தார். இந்த செய்தி எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால், இதுகுறித்து பதிவிட்ட கெளதம் மேனன், இந்த படத்தை பற்றி எனக்கு எந்த ஒரு ஐடியாவும் கிடையாது. ஆனால் இந்த படத்தின் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள இயக்குனரை எனக்கு யார் என்றே தெரியாது அவரை நான் நேரில் கூட சந்தித்தது இல்லை.

-விளம்பரம்-

தயாரிப்பாளர் ஒரு மிகப்பெரிய நபரை வைத்து ட்வீட் செய்திருக்கிறார். இது போன்ற விஷயங்கள் மிகவும் சுலபமாக நடக்கிறது என்று நினைத்தால் மிகவும் அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது என்று பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் ‘அன்புச்செல்வன்’ படத்தை தயாரித்துள்ள  “Seventy MM studios” நிறுவனம் கெளதம் மேனன் அந்த படத்தில் நடித்த காட்சியின் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர்.

Advertisement