பட வாய்ப்புகள் இல்லாததால் சீரியல் பக்கம் வந்த பிரபல நடிகர். யார் தெரியுமா இவர் ?

0
52751
jai-akash

சமீப காலமாகவே சின்னத்திரை தொடர்கள் சினிமா அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. ஒவ்வொரு சேனலும் தங்களுடைய டிஆர்பி ரேட்டிங்க்காக புதுப்புது வித்தியாசமான தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஜீ தமிழில் நீதானே எந்தன் பொன்வசந்தம் என்ற புது தொடர் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மராட்டிய மொழியில் புகழ் பெற்ற சீரியல் துலா பஹட் ரே. இந்த சீரியலை தான் தற்போது ஜீ தமிழில் நீதானே எந்தன் பொன் வசந்தம் என்ற பெயரில் ரீமேக் செய்து ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.

Image result for jai akash

- Advertisement -

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 20 வயதான இளம் பெண் அனுவுக்கும், 40 வயதை கடந்த பணக்கார குடும்பத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ்க்கும் இடையே நடக்கும் காதல், கல்யாணம் தான் இந்த சீரியலின் கதை. இந்த தொடரில் அனு கதாபாத்திரத்தில் தர்ஷனா அசோகன் நடிக்கிறார். இவர் இந்த தொடரின் மூலம் தான் தமிழில் அறிமுகமாகி இருக்கிறார். இந்த தொடரில் சூரிய பிரகாஷ் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஜெய் ஆகாஷ் நடிக்கிறார். வெள்ளித்திரையில் எவ்வளவு மாஸ் ஹீரோ, ஹீரோயினாக இருந்தாலும் இவர்கள் கடைசியில் சின்னத்திரையில் நடிக்க தொடங்குவார்கள்.

அந்த வகையில் இந்த சீரியலில் ஹீரோவாக பிரபல நடிகர் ஜெய் ஆகாஷ் நடிக்கிறார். இவர் பிறந்து, வளர்ந்தது எல்லாம் ஸ்ரீலங்காவில் தான். இவர் முதன் முதலாக தமிழில் நடித்த படம் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜாவனம் படம் தான். இதனை தொடர்ந்து இவர் ரோஜா கூட்டம், ராமச்சந்திரா, இனிது இனிது காதல் இனிது, அடடா என்ன அழகு உட்பட பல படங்களில் ஹீரோவாக நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
Image result for jai akash

இவர் மிகப் பிரபலமான நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனரும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய பல மொழிப் படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் இவர் தற்போது சின்னத்திரை நோக்கி களம் இறங்கி உள்ளார். இது தான் இவருடைய முதல் சீரியல். தற்போது இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement