காலர் டுயூனில் ‘கொரோனா விழிப்புணர்வு’ அமைச்சருக்கு மாதவன் வைத்த வேண்டுகோள்

0
83183
corona
- Advertisement -

உலகம் முழுவதும் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது இந்த கொரோனா வைரஸ் . உலகம் முழுவதும் உள்ள 24 நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று உள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் ஒருவர் உட்பட இந்தியாவில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இந்த நோய் தொற்றியவர்கள் எண்ணிக்கை 34 ஆகியுள்ளது.

-விளம்பரம்-

கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தற்போது செல் போனில் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இன்றைய காலக்கட்டத்தில் நாட்டில் உள்ள அனைவரின் கையிலும் செல்போன் தவழ்கிறது. இதனால் ‘காலர் டியூன்’ மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்து, செல்போன் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், அனைத்து செல்போன் நிறுவனங்களும் 30 நொடிகள் ஆங்கிலத்தில் ‘கொரோனா’ விழிப்புணர்வு செய்தியை ‘காலர் டியூனாக’ வடிவமைத்து உள்ளது. அதன்படி, செல்போனில் ஒருவரை தொடர்பு கொள்ளும்போது, ‘இருமல் சத்தத்துடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்தி ‘காலர் டியூனாக’ வாடிக்கையாளர்கள் செவிக்கு சென்றடைகிறது.

- Advertisement -

இந்த காலர் டுயூனால் பலர் கொஞ்சம் பீதியில் அடைந்துள்ளனர். அதற்கு முக்கிய காரணமே இந்த காலர் டுயூனில் வரும் இருமல் சத்தத்தை எதிரிடத்தில் நபரின் குரலாக எண்ணி விடுகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து பிரபல நடிகரான மாதவன், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தற்போது யாருக்கு கால் செய்தாலும் முதலில் ஒரு இருமல் சத்தம் கேட்பதை கேட்டு கேட்டு சலித்துப் போய்விட்டது. மேலும், பயமாக இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும் அது சுகாதார அமைச்சரின் ஒரு ஏற்பாடு என்று இருந்தால்கூட பாராட்டத்தக்கது தான் இருப்பினும் முதலில் வரும் அந்த இருமல் சத்தத்தை மட்டும் நீக்கி விடுங்கள். நான் கால் செய்யும் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே இந்த விழிப்புணர்வு ‘காலர் டியூனில்’ வரும் இரும்பல் சத்தத்தை மீம் கிரியேட்டர்கள் வச்சி செய்து வருகின்றனர். தற்போது நடிகர் மாதவனும் அதையே குறிப்பிட்டுள்ளார். மாதவனின் இந்த கருத்து குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை நீங்களே கூறுங்கள்.

Advertisement