தன்னை பள்ளி ஹாஸ்டலில் இருந்து அழைத்து செல்ல காரணத்தோடு தந்தையை கடிதம் போட சொல்ல கோபிநாத் எழுதிய கடிதம்.

0
1566
gopinath
- Advertisement -

“நீயா நானா” கோபிநாத் என்று சொன்னாலே போதும் சின்ன குழந்தைகள் கூட அடையாளம் சொல்லிவிடும். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். “நீயா நானா” நிகழ்ச்சி மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பிடித்தவர் கோபிநாத். தொகுப்பாளர்கள் என்றாலே பிறரை கலாய்த்துக்கொண்டு ஜாலியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழுங்குவார்கள். ஆனால் நீயா நானா கோபி மட்டும் இவர்களின் பாதையில் இருந்து சற்று வித்யாசமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்.

-விளம்பரம்-

இவருடைய சரளமான தமிழ் பேச்சும், தெளிவான உச்சரிப்பும், கனத்த குரலில் பேசுவது தான் இவரது ப்ளஸ் பாயிண்ட். கோபிநாத் அவர்கள் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தான் அறிமுகமானார். அதன் பின்னர் ஜெயா டிவி, என்டிடிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.மேலும், விஜய் தொலைக்காட்சியில் மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சியில் விவாத நடுவராக பணியாற்றினார்.

- Advertisement -

கோபிநாத்தின் பயணம் :

பின்னர் 2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் “நீயா நானா” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார். “நீயா நானா” நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் கோபிநாத் அவர்கள் சினிமாவில் காலடி வைத்தார். இவர் முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் என்ற படத்தில் நடிகர் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தோனி, நிமிர்ந்து நில், திருநாள் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கோபிநாத்தின் அண்ணன் மற்றும் தந்தை :

கோபிநாத்தை பற்றி இத்தனை விஷயங்கள் தெரிந்தாலும் அவரது அண்ணன் மற்றும் தந்தை இருவரும் நடிகர் தான் என்பது பலர் அறிந்திராத ஒன்று. கோபிநாத் அண்ணன் பிரபாகரன் சந்திரன். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு ஊருல ஒரு ராஜ குமாரி சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்நடித்து இருந்தார். அதே போல இவர் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் பாகம் இரண்டு உள்பட சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

அப்பாவிற்கு எழுதிய கடிதம் :

அதே போல கோபிநாத் தந்தை சந்திரனும் ஒரு நடிகர் தான். இவர் வென்னிலா கபடிக்குழு போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி காலமானார். இந்த நிலையில் சிறு வயதில் கோபிநாத் தனது தந்தைக்காக எழுதிய கடிதம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த கடிதத்தில் ‘அன்புள்ள அப்பா அவர்களுக்கு மகன் எழுதுவது. அப்பா ! நீங்கள் வந்து போனது முதல் எனக்கு வீட்டின் ஞாபகம் பயங்கரமாக வருகிறது. உங்கள் லெட்டர் கண்டு டைனிங் ரூமிலேயே அழுதேன்.

அக்கா கல்யாணம்னு எழுதுங்க :

எப்போதும் அழுது கொண்டே உள்ளேன் நைட் எல்லாம் தூக்கம் வரவில்லை அழுது கொண்டே உள்ளேன் அம்மாவையும் உங்களையும் பார்க்க வேண்டும் என்று நினைப்பாய் வந்து கொண்டு இருக்கிறது. அதனால் 10 தேதி வெள்ளி அன்று அவசியம் சின்ன வார்டனுக்கு லெட்டர் எழுதுங்கள். நான் அங்கு வந்து இருந்தால்தான் எனக்கு சற்று ஆறுதலாக இருக்கும். இங்கு உங்கள் நினைப்பாகவே உள்ளது. வந்து விட்டு வந்தால் நன்றாக படிப்பேன். அவசியம் லெட்டர் போடுங்க அப்பா, அக்கா கல்யாணம் என்று காரணம் எழுதவும்’ என்று எழுதி இருக்கிறார்.

Advertisement