வேறு தொலைக்காட்சிக்கு மாறிய நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் நடிகை சரண்யா.! என்ன தொடர் தெரியுமா.!

0
3720
Saranya
- Advertisement -

சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் எல்லா சீரியல்களும் வெற்றியடைந்து விடுவதில்லை. அதேசமயத்தில் சில சீரியல்கள் எதிர்பார்த்ததை விட வெற்றியடைந்து மக்களின் இதயத்திலும் என்றுமே நீங்காத இடம்பிடித்து விடுகின்றன. அப்படி எதிர்பார்த்ததை விடவும் அமோக வெற்றிபெற்ற சீரியல் தான் தெய்வமகள்.

-விளம்பரம்-

சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பான இந்த சீரியல் 5 வருடங்களையும் தாண்டி வெற்றிகரமாக ஓடியது. இந்த சீரியலில் முக்கியமான வேடத்தில் பிரகாஷாக நடித்திருந்தார் கிருஷ்ணா. கடந்த ஆண்டு நிறைவடைந்த இந்த தொடருக்கு பின்னர் பிரகாஷ் வேறு எந்த சீரியலில் நடிக்கவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் சன் டிவிக்காக விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவிருக்கும் மெகா சீரியல் ஒன்றை இயக்கவுள்ளார் செல்வா. இவர் ஏற்கனவே ‘சித்தரப்பாவை’,‘நீலா மாலா’ உள்ளிட்ட தொடர்களை இயக்கியுள்ளார். மேலும், இதுவரை 27 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் சீரியல் பக்கம் திரும்பியுள்ளார். இந்த தொடரில் பிரகாஷுக்கு ஜோடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடரில் நடித்த சரண்யா நடிக்கவுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement